பக்கம்:மறைமலையம் 28.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

210

மறைமலையம் - 28

சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐந்துஞ் சுத்த தத்துவங் களாகும். இவை சுத்தாத்துவா எனவுஞ் சொல்லப் படும். இஃது ஆணவ மலச் சேர்க்கை மிகச் சிறிதே உடைய தாயும், வாலா மாயை வாலாவினையென்னும் இவற்றின் றொடர்பு அறவே இலதாயும், மாயையும் வினையும் இல்லாத விஞ்ஞான கலர்க்கும் பிரளய கலரில் உயர்ந்தோராகிய சீகருண்டருத்திரர் முதலியோர்க்கும் மந்திரம் பதம் வர்ணம் புவனம் தத்துவம் உடம்பு நுகர்ச்சி நுகர்ச்சிக் கருவிகளாயும் பயன்படுவதாகும். இதன்கண் வைகும் உயிர்கள் பெரிதுந் தூயவாதலானும், இதன் தத்துவங்கள் ஐந்தும் நேரே சிவபிரான் றிருவருளாற்றலாற் செலுத்தப்படும் நுண்மையுந் தூய்மையும் உடைய வாதலானும் இஃது அவ்வாறு சுத்தாத்துவாவென்று சொல்லப்பட்டது.

ன்

இனி, இதன்கீழ் அசுத்தமாயையிற் றோன்றிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் ஆறும் இவற்றைத் தோற்றும் மாயை ஒன்றும் ஆக ஏழு தத்துவங் களும் ஆணவம் வி ன என்னும் இருமலப்பற்றுடைய பிரள யாகலர்க்கு இருப்பிடமாய் அவர்க்கு உடம்பாயுங் கருவி களாயும் நுகர்பொருள்களாயும் பயன்படுதலாலும், இவற்றின் கீழ் நிற்கும் பிரகிருதிமாயையிலுள்ள வாலாமை யின் அளவு இவற்றின்கண் இன்மையாலும், ஆணவ மலத்தால்

மறைப்புண்ட உயிர்களின் விழைவறிவு செயல் களை இவற்றுள் ஒன்றாகிய கலையென்னுந் தத்துவம் அம்மறைப் பினைச் சிறிது நீக்கி விளங்கச் செய்தலாலும் இவை ஒருவாற்றால் தூய்மையும் ஒருவாற்றால் தூய்மை யின்மையும் உடையவாதல் பற்றி இவை சுத்தாசுத்த தத்துவம் எனவும் மிச்சிராத்துவாவெனவும் வழங்கப்படும். அசுத்த மாயையினின்று இத் தத்துவங்களைத் தோற்றுவிக்குங்கால், இறைவியினாற்றல் நேரே அசுத்த மாயையிற் றோயாத கழிபெருந் தூய்மைத் தாதலின், அது, ஈசுரதத்துவத்திலிருப்பாரான அனந்த தேவநாயனார்பாற் பதிந்து நின்று அவரை ஊக்க, அவர் அசுத்த மாயையைக் கலக்கி அதன்கணின்று காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் என்னும் ஆறு தத்துவங்களையும் தோற்றுவிப்பரென்க. இவ்வசுத்த மாயா தத்துவங்களில் இருப்பாரான பிரளயகலர்க்கு ஆணவம் வினை என்னும் இருமலங்களோடு, மாயையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/235&oldid=1591569" இலிருந்து மீள்விக்கப்பட்டது