பக்கம்:மறைமலையம் 28.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

235

ம்

விருத்தாசலம் என்னுந் திருமுதுகுன்றத்திற்குத் தென் மேற்கே பதினொருகல் தொலைவில் திருப்பெண்ணாக என்னும் ஓர் ஊர் உளது. இதற்குப் பழைய நாளில் திருக் கடந்தை என்னும் பெயரும், இதன்கண் உள்ள சிவபிரான் திருக் கோயிலுக்குத் திருத்தூங்கானை மாடம் என்னும் பெயரும் வழங்கினமை, திருஞான சம்பந்தப் பெருமானுந் திருநாவுக்கரசு நாயனாரும் இங்குள்ள சிவபிரான்மேற் பாடி யிருக்குந் தேவாரத் திருப்பதிகங்களால் இனிதறியப்படும்.

இவ்வூரில் வேளாளர் மரபிற் பிறந்த அச்சுதகளப்பாளர் என்னுஞ் சிவனடியார் ஒருவர் இருந்தனர். இவர், திருவெண் ணெய்நல்லூர்ச் சடையப்ப பிள்ளையின் உடன் பிறந்தாளை மணம் புரிந்து இல்லற வொழுக்கத்தை இயல் வழாது நடத்தி வந்தனரெனச் சிலர் கூறுவர். இவ்வாறு இவர் தம் அருமை மனைவியாருடன் கூடி நெடுநாள் வாழ்ந்து வந்தும், இவர்க்கு மகப்பேறிலதாயிற்று. அது கண்டு இவர்,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு."

என்று தெய்வத் திருவள்ளுவர் அருளியபடி நமக்கு மகப்பேறு வாய்ப்பினன்றோ நாம் மேற்கொண்ட இல்லறம், நல்லறமாம் என மனங்கவன்று, தங்குலகுருவாகிய அருணந்தி சிவாசாரி யாரை யடைந்து தங்குறையினைத் தெரிவித்தனர். அவர், உடனே திருஞானசம்பந்தப் பெரு மான் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகத் திருமுறை யினைக் கொணர்வித்துச் சிவபிரானையுந் திருஞான சம்பந்தரையும் வழிபட்டு, அதன்கட் பட்டுக்கயிறிட்டுப் பிரித்துப் பார்க்கப்,

"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

99

என்னுந் திருவெண்காட்டுத் திருப்பதிகப் பாட்டுக் கட் புலனாயிற்று. அதுகண்டு அச்சுதகளப்பாளரும் அருணந்தி யாரும் மகிழ்மீக்கூர்ந்தனர். அதன்பின் அருணந்தியார் அத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/260&oldid=1591595" இலிருந்து மீள்விக்கப்பட்டது