பக்கம்:மறைமலையம் 28.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

மறைமலையம் - 28

ஓம் திருச்சிற்றம்பலம்

சிவஞான போதத் தொன்மைச் சிறப்பு

வேதம் பசுவதன்பால் மெய்யா கமம்நால்வர் ஓதுந் தமிழதனின் உள்ளுறுநெய் -- போதமிகு

நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்.

வேதம் : திருக்குறள். ஆகமம் : திருமந்திரம். நெய் : வெண்ணெய்

வெண்பாத் தொகை

ஐயொருப தேழேழும் ஆங்கமைந்த நாலாறும் ஐயொன்ப தோரெட்டோ டாறாறும் -- துய்யஎட்டோ டெண்பத்து மொன்றுஞ் சிவஞான போதத்தின் மன்னருளும் வெண்பா வகை.

மெய்கண்டான்

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி

மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும்--வெண்ணெய்நல்லூர்

மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை

கைகண்டார் உள்ளத்தின் கண்.

திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/29&oldid=1591358" இலிருந்து மீள்விக்கப்பட்டது