பக்கம்:மறைமலையம் 28.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

265

சிவஞானபோதமுதல் நூலையும் இத்தமிழகம் எங்கும் வழங்கச்

செய்தனர்.

னி, அருணந்தியாரின் மாணவருள் 'மறைஞான சம்பந்தர்' என்னும் பெரியார் தவஞ்செய்தலிலேயே முழுதும் ஈடுபட்டிருந்தமையின் தாம் ஏதும் நூல் செய்தில ரேனுந், தில்லைவாழ் அந்தணருள் ஒருவரான உமாபதி சிவனார் என்பவர் வடநூல் தென்னூற் கரைகண்டு சிவபிரான் றிருவடிக் கண்ணும் மெய்யன்புடையராய் முடிந்த நிலை பெறுதற்கேற்ற தகுதி வாய்ந்திருத்தல் நோக்கி அவரை ஆட்கொண்டருளிய பின், அவர்க்குச் 'சிவஞான போதஞ்’ ‘சிவஞானசித்தி' என்னும் இரு நூல்களையும் வழங்கி, “அவற்றிற்குச் சார்பு நூல் ஒன்று இயற்றுக!” என்று கட்டளை தந்தனராக, அதனைத் தமது முடி மி சை ஏற்ற உமாபதிசிவனார் அங்ஙனமே அதற்குச் சார்பு நூலாகச் ‘சிவப்பிரகாசம்' எனப் பெயரிய செம்பொருணூலை இயற்றி யருளினார். இவ்வரலாற்றினை முன்னும் எடுத்துக் காட்டினாம்.

இனி, அருணந்தியார், சிவஞானசித்தி என்னும் நூலைச் சுபக்கம் பரபக்கம் என இருவகைப்படுத்து விரித் தருளிச் செய்ததன் மேலுந், தாந்தங் குரவனை வினாவிய வினாக்களும் அவற்றிற்குத் தங்குரவன் இறுத்த விடைகளும் அடக்கி 'இருபா இருபஃது’ என்னும் ஓர் அரிய சித்தாந்த நூலையும் இயற்றியருளினர்.

இனி, மெய்கண்டதேவர் தம்மாணவர் நாற்பத்தொன் பதின்மரில், ‘மனவாசகங் கடந்தார்' என்னும் பெரியார் 'உண்மை விளக்கம்' எனப் பெயரிய ஓர் அரிய நூலை இயற்றியருளினர்.

னிச், சார்பு நூலாகிய 'சிவப்பிரகாசம்' செய்த உமாபதி சிவனார் ‘திருவருட்பயன்’, ‘வினா வெண்பா', 'போற்றிப் பஃறொடை’, ‘கொடிக்கவி’, ‘நெஞ்சுவிடு தூது’, ‘உண்மை நெறி விளக்கம்', ‘சங்கற்பநிராகரணம்' எனப் பெயரிய வேறேழ் அரும் பெறல் நூல்களையும் இயற்றி யருளினர்.

இங்ஙனமாக, மெய்கண்டதேவர்க்குமுன் உய்ய வந்ததேவ நாயனார் இருவரும் அருளிச்செய்த ‘திருவுந்தி யார்’, ‘திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/290&oldid=1591625" இலிருந்து மீள்விக்கப்பட்டது