பக்கம்:மறைமலையம் 28.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

யுடை

  • மறைமலையம் - 28

பெறும் உடம்புகள் போலாது, சீவர்களறிவினான் இப்பெற்றிப் பட்டதென்றுரைக்கவுமாகாத ஓர் அருமைத் திருமேனி யனாதல்." அறியாமை வயப் பட்டு வருந்தும் உயிர்கட்கு இருவினையை ஊட்டி யொழித்தற் பொருட்டு அசுத்தமாகிய மாயையினின்றும் படைத்துக் கொடுக்கப்படுவனவாகலின் சீவர்கள் பெறும் உடம்புகளெல்லாம் அருவருக்கற் பாலன வேயாம். இறைவன் பெறுகின்ற அருமைத் திருமேனியும் சீவர்கள் பெறும் உடம்பு போல்வதொன்றென் றுரைப்பே மாயின், அங்ஙனமாகிய அசுத்த வுடம்பைப் பெறும் இறை வற்கும் எமக்கும் வேறுபாடு இல்லாமையின் அவற்குச் சுதந்திர முண்டென்ற கூற்று இழுக்காம். சுதந்திரமின்றாகவே அவன் பிறர்க்குச் சரீரம் படைத்துக் கொடுத்தலும், அச்சரீரங்கள் வசிப்பதற்கு உலகங்கள் சிருட்டித்து வைத்தலும் இல்லை யென்றாம் என்னையோவெனின்? எம்மைப் போலவே நோய் முதலிய குற்றங்களான் வருந்திப் பிறந்து இறந்தொழியும் ஒருவன் எமக்கு அவற்றை எல்லாஞ் சிருட்டித்துத் தரமாட்டுவா னென்றல் ‘குருடனுக்குக் குருடன் வழிகாட்டினான்' என்பது போல நகைபடுதற்கேதுவாமாகலின் என்க. அற்றன்று, சீவர்கள் சரீரம் போல்வதொன்று கொள்ளுமாயினும், இறைவன் அது பற்றித் துடக்குறுவான் அல்லனாகலின், அஃதவற்கு இழுக் காதல் யாங்ஙனமெனின்;--நோயுடம்பு கொள்ளினும் அது பற்றிச் சிறிதுந் துடக்குறாது வேறுநிற்க வல்லனான முதல்வன் தான் ஒரு திப்பிய சரீரங்கொள்ள அறியாது, அங்ஙனம் நோய்ப்பட்டு வருந்துமொரு கரும சரீரம் மேற்கொள்ள வேண்டுதல் என்னையோ வெனக் கூறிமறுக்க. சீவர்கள் வினைப் போக நுகர்தற் பொருட்டு எடுக்குங் கருமசரீரம் அசுத்தமுடைய வாதலும், இறைவன் அச்சீவர்க்கு அறிவு கொளுத்தல் வேண்டுமென்னும் அருட்குறிப்பினானே ஐந்தொழி லியற்று முகத்தாற் றானே ஓர் அருட்டிருவுருவு கொள்ளுதலின் அஃது மங்கல வியற்கைத்தாதலும் அறிவுடை யார்க்குத் தெற்றென விளங்குமாதலின் இறைவற்குத் தூய வுடம்பினனாத லென்னுங்

குணம் வேண்டப்பட்டது.

னி னி இயற்கை யறிவினனாதல் என்பது, "பிறரொடு பொருந்திப் பழகுதலானும் ஆன்றோர் நூல் கற்றலானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/33&oldid=1591362" இலிருந்து மீள்விக்கப்பட்டது