பக்கம்:மறைமலையம் 28.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

13

புறம்போகக் காண்டும் அன்றே? ஆகவே, இரக்கமுள் வழியெல்லாம் பிறர்க்கு உதவி புரிதல் ஒருதலையாக நிகழக் காண்டலின், ஐந்தொழிலியற்றி உயிர் கட்குதவி புரியும் இறைவற்கும் அஃதுண்மை பெற்றாம். இரக்கம் இல்வழியும் புகழ் கருதிப் பிறர்க்குதவி புரிதல் காண்டு மாகலின் அந்நியதி ஆண்டு இல்லையாலோ வெனின்;-- சீவர்கள் ஒரு பயன் கருதியும் உதவி புரிதல் அவர் மாட்டு ஒரு குறை உண்மை யினாலே யாம்; தமக்குள்ள அக்குறையினை நிரப்புதற் பொருட்டு அவர் அங்ஙனம் புகழ் வேண்டுகின்றார். எல்லாப் பாருட்கும் முதல்வனாவான் தனக்கொரு குறை பாடும் இன்மையின் அவன் பிறர்பால் ஒன்று வேண்டுவானும் அல்லன். அல்லதூஉம், இவனுக்கு உரிமையின்றாய்ப் பிறராற் றரப்படுவதாம் பெரும் பொருள் ஒன்றுண்டோவெனக் கூறி மறுக்க. இதனான் இறைவன் ஐந்தொழிலியற்றும் உபகாரத் திற்குப் பிறிதொருவாற்றாற் காரணங் கற்பித்தல் பொருந்தா மையின், அதற்கு இரக்கமே காரணமாம் என்பது துணியப்படும். அவ்வருளிரக்கமுஞ் சீவர்கட்குப் போலச் செயற்கையான் விளைவதின்றி இறைவன்மாட்டு இயற்கையிற் பொருந்திக் கிடக்கும் ஓர் அருமைக் குணமாம் என்க.

மை.

இனி, வரம்பிலின்பமுடைமை என்பது “உயிர்கண் மாட்டுச் சிறுபான்மை தோன்றி யழியுஞ் சிற்றின்பம் போலாது நிரம்பிய பேரின்பமே தன்றன்மையாய் உடை கற்கண்டினும் இன்சுவை பயப்பதாய்த் தேன்றதும்பு மாங்கனி ஒன்றை இறுக்கிப் பிழிந்து அதன் இரசத்தை நாவிற் பருகி இறக்கியபின் அதன் இனிமை தோன்றாது. இவ்வாறே வரம்புபட்ட பரிமாணமும் அசுத்தமு முடையவான கன்ம வுடம்பான் நுகரப்படும் இன்பங்களெல்லாம் ஒரு கண மாத்திரையே நிலையுதலுடையனவாம். இறைவனது திப்பிய மங்கள சரீரம் இன்ப வுருவின தாகலின், அது காணினுங் கருதினுங் களிதரும் இயல்பினதென்றே துணியப்படும். எண்ணிறந்தனவாம் எல்லா வுயிர்க்கும் இன்பந் தருதற் கடப்பாடுடைய இறை முதற் பொருள் சிறுகிய இன்பத் ததாயின் அவற்றை எல்லாம் இன்புறுத்துதலாகாமையின் அதற்குப் பேரின்பவுருவுண் டென்பது தானே போதரும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/38&oldid=1591367" இலிருந்து மீள்விக்கப்பட்டது