பக்கம்:மறைமலையம் 28.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

19

உயிரில் இயல்பாகவுள்ள அவ்வழுக்குக் குணம் போல்வதோ, அன்றி அதன்கண் ஒற்றித்து நிற்கும் ஒரு தனிப் பொருளோ என்றவழிக் குணமாயின் அஃதான் மாவினின்று எக்காலத்தும் பிரியாது, தனிப் பொருளாயின் அஃதொரு காலத்துப் பிரியவமையு மாகலின் அஃதொரு தனிப்பொருளென்றே துணியப்படும். அல்லதூஉம், உயிர்கள் பிறவிகடோறும்அறிவு விகசிக்கப் பெற்றுப் போதுதல் கண்கூடாக வைத்து அறியக் கிடத்தலின், அவர் தமக்கு அஃது பேரின்பந்தருதல் வகையான் நீங்குமென்பது திண்ணமேயாம்.

னி

இனி ஒரு சாரார் உரைக்குமாறு இறைவன் உயிர்கட்கு அறியாமையினை முன்னே கூட்டி வைத்தானென்றலும் பொருந் தாது. என்னை? அறியாமையினை அங்ஙனம் பொருத்திய அவ்விறைவன்பின் அதனை நீக்கி அறிவு கொளுத்த வேண்டுவ தின்மையின். இறைவன் உயிர்கட்குப் பிறவி கடோறும் அறிவு கொளுத்தி உபகரித்தல் இனிதறியப் படுதலானும், அவர்க்கு நலந்தருதலே தன்றிருவுள்ளக் குறிப்பாகக் கொண்ட அவனது அருட்டன்மைக்கு அங்ஙனம் அறியாமை பொருத்தல் ஓர் ழுக்காமாதலானும்

அவருரை அடாதென்றொழிக அற்றன்று, இந்திரசாலங் காட்டுவான் போல இறைவனும் ஒரு திருவிளை யாடன் மாத்திரையானே சூனியமான அறியாமை யினை ஆன்மாவின்கட் பொருந்தச் செய்வானாதலின் அது வெறுந் தோற்றமேயல்லது உண்மை யன்றெனக் கூறுவா ருரையும் பொருந்தாது. அறியாமை என்பது வெறுஞ் சூனியமேயாயின் அச்சூனியம் ஆன்மாக்கட்குக் கணந்தோறும் பல்வேறுவகைப்பட்ட துன்பங்களை விளைவித்தலாகாமை யானும், உள்ள தொரு பொருளையே பொருந்தச் செய்தலாகு மல்லது இல்லதொன்றனையும் அவ்வாறு இயைவித்தல் யாண்டும் நிகழாமை யானும், எல்லா முதன்மையும் எல்லாக் குணங்களுமுடைய இறைவன் ஒரு காரணமுமின்றி ஒரு திருவிளையாடல் இயற்றினானென் றலும், அத்திருவிளை யாட்டான் ஆன்மாக் கட்குச் சொல்லு தற்கரிய பேர் இடும்பை விளைவிப்பானென்றலும் அவனது இறைமைக் குணத்திற்கு வழுவா மாதலானும் அஃதுரையன் றென்பது தேற்றமாம் என்க.

களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/44&oldid=1591373" இலிருந்து மீள்விக்கப்பட்டது