பக்கம்:மறைமலையம் 28.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

காண்டதெனின்;

மறைமலையம் 28

——

இனி அவ்வறியாமையினை அருட்டிரு வுடையனான இறைவனே ஆன்மாவின்கட் பொருத்துவான் அல்லன்; ஆன்மாவே அதனை விரும்பிஎடுத்துத் தன்கட்பொருத்திக் ன சுத்த அறிவாயுள்ள ஆன்மா, சுத்த சொயம்பிரகாசப் பெருவெளியாய் விளங்கும் முழு முதற் கடவுளைப் பற்றுதல் விட்டுத், தன் அறிவுக்கு ஊனம் விளைத்துத் துன்புறுக்கும் அசுத்த ஆணவ மலத்தைப் பற்றிய தென்றல் பொருத்தமில்லாக் கூற்றாம். அல்லதூஉம், ஆன்மாவே முன்னொரு காலத்து அவ்வாணவத்தை விரும்பிப் பற்றிய தாயின், அங்ஙனந் தான் விரும்பிப்பற்றிய அதனை என்றும் விடாது தன்கண்ணே வைத்திருத்தல் வேண்டும். அப்படித்தான் அது வைத்திருக்குமென்றே கொள்வேமெனின்; இப்போது ஆ ன்மாக்கண் மாட்டுப் பிரத்தியக்கமாய் நடைபெற்று வருகின்ற அறியாமை நீக்கமும், அறிவு விளக்கமும், இது கொண்டு அனுமித்தறியற் பாலதாகிய வீடுபேற் றின்பமும் என்றும் உளவாகா தொழிதல் வேண்டும். அதுவேயுமன்றி, அறியாமை யினின்றும் நீங்கவேண்டும் என்னும் விருப்பமும் நம்மனோர் பால் இல்லாதாக வேண்டும். இவையெல்லாம் அங்ஙனம் இருப்பக் காணாமையானும், அறியாமையை நீக்கி அகல ஒழிப்பதற்கு ஆன்மாக்கள் நமக்கு உரிய விழுப்பொரு ளெல்லாங் கொடுத்து முயலக்காண்டு மாகலானும் ஆன்மாவே ஆணவத்தை விரும்பிப் பற்றியதெனல் ஒரு சிறிதும் பொருந் தாதென மறுக்க அற்றன்று, இன்பமல்லாத வற்றை இன்பமாகப் பிறழ ணர்ந்து பற்றிய ஒருவர் அதன் இயற்கை அறிந்த மாத்திரத்தாலே அதனைவிட்டு நீங்க விழைதல் போல, ஆன்மாவும் ஆதிகாலத்தே ஆணவத்தை இன்பந்தருவதெனப் பிறழ உணர்ந்தது பற்றிப், பின் அஃது அவ்வாறல்லாமைகண்டு அதனை ஒழிக்க முயல்கின்றதென உரையாமோவெனின்; உரையாம். ஆன்மா அநாதியே சுத்த அறிவுடையதாய் நின்றால், ஆணவமலத்தின் இயல்பை இனிது அறிந்திடுமன்றோ? இன்பந்தரமாட்டாத அவ் வாணவத்தை இன்பந் தருமியல் த பிற்றாக வைத்துப் பிறழ உணர்ந்த தென்னை? என்று ஆசங்கிப் பார்க்கு அதனைப் பரிகரித்து உரை கூறல் ஏலாதாகலின், அஃது, அதனைப் பிறழ உணர்ந்து பற்றிய தென்றல் முன்னொடுபின் முரணுற்று அழியுமென்க. ஐயவுணர்ச்சிக்குந் திரிபுணர்ச்சிக்குங்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/45&oldid=1591374" இலிருந்து மீள்விக்கப்பட்டது