பக்கம்:மறைமலையம் 28.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

சிவஞான போத ஆராய்ச்சி

L

37

கோடி மடங்கு பெரியவான வேறு வேறு பொருள்களும் தோன்றுதற்கு வேண்டுமளவும் வேண்டுமளவும் இவ்வைம் வ்வைம் பூதங்களும் உருப்புலனாகாத காரண நிலையில் விரிந்து கிடக்கின்றன. மிகவும் அகன்று ஆழ்ந்ததான ஓர் ஏரியின்கண் உள்ள தண்ணீர் முழுதும் மிகக் கொடியதொரு வேனிற் காலத்தில் வற்றிப் போக நிலன் வறண்டு கிடத்தலைக் கண்டா மன்றே. அந்நீர் முழுதும் எவ்வா றாயிற்றென்று சிறிது ஆராயலுறின், கட்புலனாகாத ஆவி யாக மாறிப் போயின தென்று சிறிதறிவுடையாரும் நன்குணர்வர். பேரளவினதான அந்நீர் அத்துணையும் அங்ஙனம் மாறிச் சென்ற போது, மாறிய ஆவியின் பரப்பு நம்மாற் சிறிதும் உணரலாகாதாயிற்று. பின்னரொருகால், மாறிய ஆவி குளிரால் இறுகித் திரும்பவும் மழைத் துளிகளாக அவ்வேரியின்கண் வீழ்ந்து அதனை நிரப்பிய வழி, நீரினளவு திரும்பவுங் கட்புலனாவதாயிற்று. இதனால் ஆவியாக மாறிய நீரின் நிலையே காரண நிலையென்றும் அவ்வாவி நீராக இறங்கிய நிலையே காரிய நிலையென்றும் இனிது உணராற்பாற்று காரியநிலை போல ஐம்பூதங்களின் காரண நிலை பொறி யுணர்வால் அளந்தறியப்படாதாயினும், பொருள்கள் திரி படையுந் தன்மையினைப் பகுத்துணரும் நுண்ணறிவினால் அவற்றின் காரணநிலையியல்பு அறிவுடையார்க்குத் தெற்றென விளங்கா நிற்கும். ஐம்பூதங்கள் ஐந்தும் பொறியுணர்வுக்குத் தென்படாத காரண நிலையிற் சூக்கும வடிவாக நிலைபெறும். அவற்றின் சூக்கும வடிவு சத்தத்திற்கு இருப்பிடனான ஆகாயம் போல்வதாகலின், அவற்றுள் ஒவ்வொன்றனையும் குறித்துக் கூறுங்கால் பிருதிவி ஆகாயம், அப்பு ஆகாயம், தேயு ஆகாயம், வாயு ஆகாயம், ஆகாயம் என்று முன் நான்கும் அடை காடுத்தும் பின் ஒன்றும் அடை கொடாதுங் கூறப்படும். ங்ஙனஞ் சூக்கும வடிவுற்று நிற்கும் ஐம்பூதங்களையும், தூலவடிவுள்ள பூதங்களை வழங்குமாறு போலப் பூதங்கள் என்று பெயர் கூறுதலாகாமையின் அவை தம்மைத் ‘தன் மாத்திரைகள்’ என்று ஆன்றோர் வழங்குப. இச்சொற்பொருள் மாணாக் கர்க்கு இனிது விளங்காதென்று கருதி, அவற்றைப் பஞ்சபூத ஆகாயங்கள் என்று அங்ஙனம் பெயர் வைத்துக் கூறுவே மாயினேம். சூக்கும வடிவில் நிற்கும் இப் பூதாகாயங்கள் ஐந்தனையும் சத்தம், பரிசம், உருவம், இரசம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/62&oldid=1591391" இலிருந்து மீள்விக்கப்பட்டது