பக்கம்:மறைமலையம் 28.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடப்

ரு

சிவஞான போத ஆராய்ச்சி

45

பொருளே யென்றற்குப் பிரமாணம் இன்மையின் அங்ஙனம் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தா தென்க. அற்றன்று, அறிவில்லா இந்திரியங்களுக்கு அறிவு காட்டுவது மனமே யாமென்றல் எல்லாருக்கும் ஒப்ப முடிந்தமையின், அங்ஙனங் காட்டும் மனம் அறிவுடைய தேயாம் என்றற்கு வேறு பிரமாணம் வேண்டுவதும் உண்டோவெனின்; இந்திரியங் களுக்கு அறிவு காட்டுவது மனம் என்னுங்கால், ஆண்டு மனமே அறிவுடைத் தென்னாமல் அம்மனத்தினைக் கருவியாக ஊக்கும் உயிரே அறிவுடைப் பொருள் என்று கொள்ளப்படும் என்க. அற்றேல், அறிவுடைப் பொருளாகிய உயிர் தானே இந்திரியங்களை இயக்குவதின்றி, அறிவில்லா மனம் என்னும் ஏனையொரு கருவி வாயிலான் அவற்றை இயக்குதல் எற்றுக்கெனின்; அறிவுப் பொருளான உயிர் ஏனைச் ப்பொருள்கள் எல்லாவற்றினும் மேலதாஞ் சூக்குமப் பொருளாகலின், அத்துணைச் சூக்குமமான அது தூல ச ங்களை நேரே பொருந்தி அறிவு நிகழ்த்தல் ஏலாது. இதனை ஓர் உதாரணத்தின் கண் வைத்து விளக்குதும்: கண்ணானது தன் பார்வைக்கு எட்டாத பருப்பொருள் களைக் காண வேண்டியக் கால், தன்னினும் தூல ஆற்றல் மிக்க தூர திருஷ்டிக் கண்ணாடி யினுதவியால் அவற்றைக் காண்கின்றது; கண்ணின் அறிவு சூக்குமமாகலின் தன்போற் சூக்கும ஆற்றல் உள்ள கண்வழியே அச்சடப்பொருள்களை நேரே காண மாட்டாதாய்க் கண்ணினுந் தூல ஆற்றல் மிக்க பலதிறப்பட்ட கண்ணாடி வழியே அவ்வப்பருப் பொருள் களைக் காண்கின்றது. இவற்றுள் கண்ணறிவு மிக்க சூக்குமம், கண் அதனோடு சிறிது ஒத்த சூக்கும் தூலம், கண்ணாடி கண்ணோடு சிறிது ஒத்த தூலம், கண்ணாடியிற் றோன்றும் பருப்பொருள் கண்ணாடியினுந் தூலம்; இங்ஙனம் படிப்படியே ஒன்றினொன்று தூலமாய் யையக் கண்ணறிவு தூரத்திலுள்ள பெரிய உலகங்களைக் காணுங் காட்சி நிகழா நிற்கின்றது. இவ்வடைவே உயிரினறிவும் இந்திரியக் காட்சியுள் நிகழுமாறு அறியற் பாற்று. உயிரின் அறிவு மிகவுஞ் சூக்குமமான இயல்பு டையது; இத்துணைச் சூக்குமமான அறிவோடு நேரே இயைந்து நிற்குஞ் சூக்கும சடக்கருவிகள் பலவுள, அவற்றைப் பின்னே விரித் துரைப்பாமாகலின், ஈண்டு மனம் என்னுஞ் சடக்கருவியை

தூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/70&oldid=1591399" இலிருந்து மீள்விக்கப்பட்டது