பக்கம்:மறைமலையம் 28.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

59

இயக்கம் மிக வாய்ந்த தூல தத்துவமாகும், தாமதம் ஒளி சிறிதுமின்றி இருண்டு இயக்கமும் இல்லாதாய் மிகவுந் தூலமாய்க் கிடக்கும் தத்துவமாகும். இவ்வியல்பிற்றான தாமதகுண தத்துவம் நான் என்னும் உணர்வுக்கு இடஞ் செய்யும் அகங்கார தத்துவத்திற் கலந்த மாத்திரையானே ஆண்டு நின்றும் சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தும் தோன்றா நிற்கும். தன் மாத்திரைகள் என்று ஈண்டு ஓதப்பட்ட இவை, பிருதிவி அட்டித் தேயு வாயு ஆகாயம் என்னும் ஐந்தும் தமது தூல நிலை கரைந்து பின்னுஞ் சூக்குமமாய் நுணுகிய தத்துவங் களோ மென்ப தூஉம், அவை அங்ஙனம் கரைந்து நுணுகிய சூக்கும நிலையிற் றம் ஐவகை வேறுபாடுங் காட்டி நின்றாற்போல நில்லாது, பின்னுங் கரைந்து நுணுகி அதிசூக்குமமாய் வேறுபாடு காட்டாது பொதுப்பட நிற்குநிலையே பூதாதியாங்காரம் எனப்படு மென்பதூஉம் மேலே இனிது விளக்கிப்போத்தாம். இனி இத்தன் மாத்திரைகள் ஐந்தினின்றும் பிருதிவி அப்புத் தேயு வாயு ஆகாயம் என்னும் ஐந்தும் தூல பூதங்களும் தோன்றும். இங்ஙனம் வரிசைப்பட்ட முக்கூற்றுத் தத்துவங்களிற் பூதாதி யாங்காரம் சூக்குமம், அதனிற்றோன்றிய தன் மாத்திரைகள் அதனிற் சிறிது குறைந்து சூக்குமம், தன் மாத்திரைகளிற் றோன்றிய ஐம்பூதம் அவற்றினுங் குறைந்த தூலங்கள். இனிப் பூதாதியாங்காரத்தினுஞ் சூக்கும மாவது வைகாரி காகங்காரம். வைகாரிகாகங்காரத்தினுஞ் சூக்கும மாவது தைசதாகங்காரம். இன்னும் பஞ்ச பூதங்களினுஞ் சூக்குமமான சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தினையும், ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும் விடயமாகும் சத்தம் பரிசம் ருவம் இரசம் கந்தம் என்னும் பூதகுணங்கள் ஐந்தினையும் வேறு வேறென்று அறிதல் வேண்டும். அற்றாயின், சூக்கும பூதங்களாகிய தன் மாத்திரைகள் ஐந்தினையும் பூதகுணங்கள் போல வைத்து அங்ஙனம் சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் எனப் பெயர் கூறியவா றென்னை யெனின்;--தூல பூதங்கள் ஐந்தும் தம் தூல உருக்குலைந்து கரைந்து சூக்குமமாய்ப் போனவழி, ஆண்டுத் தமதுருவைச் சிறிதுங் காட்ட மாட்டா வாய்த் தங்குணங்கள் மாத்திரையே உய்த்துணர்வார்க்குப் புலப்பட்டுத் தோன்றுமாறு பரவி நிற்றலின் அவ்வாறவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/84&oldid=1591413" இலிருந்து மீள்விக்கப்பட்டது