பக்கம்:மறைமலையம் 28.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் 28

அக்குணங்கட்குரிய பெயராற் கூறப்பட்டன. சேயதாக இன் மணங் கமழும் ஒரு பணவெடை நானத்தை ஒரு பேழையுள் நெடுநாள் வைத்திருப்பின் அந்நானக்கட்டி கரைந்து கட்புலனா காது போகா நிற்கும்; அஃது அங்ஙன மாயினும் அப்பேழை யைத் திறந்த வளவானே மிக இனிய மணம் ஆண்டு நின்றும் எங்குங் கமழ்தலான் அதுதான் சூக்கும வுருவாய் அங்கே நிலை பெறுதலை யார்க்குந் தெரிவுறுத்தல் கண்டாமன்றே; அவ்வாறது தன் உண்மை யைத் தன்னுருவத் தானன்றித் தனது மணமாகிய குணத்தால் புலப்படுத்தின மையின், அக்குணப் பெயரே அப்பொருட்கும் பெயராக வழங்கி வரலாயிற்றென் றோர்க. ஆகவே, தன் மாத்திரைகட்கும் பூதகுணங்கட்கும் பெயரொன்றாயிருத்தல் கொண்டு அவை யிரண்டும் ஒன்றே போலுமெனக் கருதி மயங்கற்க; அவை யிரண்டும் வேறு வேறென்பதே தேற்றமாம் என்க. அது நிற்க.

இனித் தாதமகுணக் கலப்பாற் பூதாதியாங்காரமெனப் பெயர் பெற்ற தத்துவத்தினின்று தன் மாத்திரைகளும், அவற்றினின்று ஐம்பூதங்களுந் தோன்றுமென்றது ஒக்கும்; ஆனால், அவ்வைம்பூதங்களும் புறத்தே அண்டத்தின்கட் காணப்பட்டாற் போல, அகத்தே இப் பிண்டத்தின் கண்ணுங் காணப்படுவதில்லையாலோவெனின்;-- அற்றன்று, அவ்வைம் பூதங்களின் வேறாக உடம்பென ஒன்றின்மை யானும், உடம்பின் கூறுகள் அத்துணையும் அவ்வைம்பூத பரிணாமங் களே யாகலானும் உடம்பின்கண் ஐம்பூதங்கள் காணப்படுவ தில்லை யென்றல் யாங்ஙனம்? எனக் கூறி மறுக்க.அற்றேல் அவ்வைம்பூத பரிணாமங்களாம் உடம்பின் கூறுகள் சிலவற்றைச் சிறிதெடுத் துக் காட்டுகவெனின்; அவ்வாறே காட்டுதும்..

பிருதிவியின் கூறாய் உடம்பிற் காணப்படுவன என்பு தசை நரம்பு தோல் பல் நகம் மயிர் முதலியன; அப்புவின் கூறாய்க் காணப்படுவன மச்சை மூளை கோழை வெள்ளை குருதி சிறுநீர் வியர் முதலியன; தேயுவின் கூறாவன உண்ட வற்றை அறப் பண்ணும் அகட்டுத்தீ, நெஞ்சத்தே நிற்கும் வெம்மை, கண்ணில் உள்ள கருமணியழல், பித்தம், நீர் வேட்கை, அச்சம், இணை விழைச்சு முதலியன; வாயுவின் கூறாய் உடம்பில் நிற்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/85&oldid=1591414" இலிருந்து மீள்விக்கப்பட்டது