பக்கம்:மறைமலையம் 29.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

77

மெய்ம்மையைப் புலப்படுத்தவும் பன்னிரண்டு பழைய 'உபநிடதங்க'ளும் ஆக்கப்பட்டன. இவைகளுண்ட ான காலத்திலுங்கூடப், பிறப்பளவில் சாதிவேறுாபடு சொல்லப் படவில்லை. சுக்கிலயசுர்வேதத்தின் முப்பதாம் இயலிற் பலவேறு தொழில்களைச்செய்யும் பலவேறு மக்கட் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே எடுத்துரைக்கப்பட்டிருக் கின்றன; இங்ஙனமே தைத்திரீய பிராமணத்திலுஞ் சொல்லப் பட்டிருக்கின்றன; ஆனால், அவற்றுட் சாதிவேறுபாடுகளும், அவற்றின் உயர்பு இழிபுகளும் பேசப்படவில்லை. அதற்கு ஒருசான்று எடுத்துக் காட்டுதும்: முன்னொருகால் சரசுவதி யாற்றங்கரையிலே இருடிகள் ஒருவேள்வி வேட்கலாயினர். அப்போது 'இல்லூஷை' என்னும் ஓர் அடிமைப் பெண்ணின் புதல்வரான ‘கவஷா' என்பவர் அவ்வேள்விக்கு வந்திருந்தனர். அவர்கள் அவரை ஓர் அடிமையின் பிள்ளை என்பதுபற்றி கழ்ந்து, அவ்வேள்விக்களத்தினின்றுந் துரத்த, அவர் சென்ற இடத்திற்கே அவ் யாற்று நீர் செல்லுமாறு கடவுள் அருள்செய்தனர்; அதனை யுணர்ந்த இருடிகள் அவரை யிகழ்ந்த தமது அறியாமைக்கு வருந்திப் பின்னர் அவரை ஒரு சிறந்த இருடியாக ஏற்று வணங்கினர்; என்று ஐதரேயபிரா மணம் (2,19) புகலுகின்றது. இக் 'கவஷா' என்பவரே இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டிலத்திற் பல பதிகங்களை இயற்றி யிருக்கின்றனர். இவ்வாற்றாற் பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலும் சாதி வேற்றுமை நிலைபெறவில்லை யென்பது புலனாகின்றதன்றோ?

க்

இன்னும், பல வேள்விகளைச் செய்து முடித்தவனும், அவ்வேள்விகளில் முனிவரர்க்கும் பிறர்க்கும் ஏராளமான நன்கொடை வழங்கினவனும், விசுவாமித்திர முனிவரைப் பாதுகாத்தவனும், இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்திற் பாராட்டப்பட்டவனுமான 'பைஜவனன்' என்பான் ஒரு சூத்திரனே என்று மாபாரதம் சாந்திபர்வம் (2304 -ஆம் செய்யுளிலிருந்து) நுவல்கின்றது.

6

இன்னும், இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய முனிவரர் பலரும் அரச அரச வகுப்பினையும் வணிக வகுப்பினையுஞ் சேர்ந்தோர் ஆவரென்று மற்சபுராணத்தின் 132-ஆம் இயல் இருக்குவேதத்தின் மூன்றாம்

வகுத்துரைக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/102&oldid=1591766" இலிருந்து மீள்விக்கப்பட்டது