பக்கம்:மறைமலையம் 29.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

79

இந்தியா என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றார்2. வடக்கிருந்துவந்து இந்தியநாட்டுள் நுழைந்த ஆரிய மக்களை எதிர்த்த பத்து அரசர்களுக்குத் தலைவராய் நின்றோர் பூருக்களும், அவர்க்குத் துணைவராய் அஞ்சா நெஞ்சினராய் நிலவிய பரதர்களும் ஆவர். இத் தமிழ அரசர் பதின்மருட்சிவர் (சைவர்) விஷாநியர் (வைஷ்ணவர்) என்பார் இருவரும் சேர்த்துச்சொல்லப்படுகின்றனர்3. ஆகவே, அத்துணைப் பழையகாலத்திலேயே தமிழருட் சிவபிரானை வணங்குஞ் சைவரும், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவரும் வலியராயிருந்து ஆரியரை எதிர்த்து நின்றமை புலனாகும். பழைய தமிழ்மக்களுட் போர் வலிமையில் மிகச் சிறந்துநின்ற பரதர் தம் குடியிற்றோன்றிய அரசர்களே இவ் இந்தியநாடு முழுமையும் ஆண்டுவந்தனர்; அதுபற்றியே, அவர்களின் செங்கோல் நீழலில்வந்து வகிய ஆரியமக்கள் இவ் இந்தியநாட்டைப் ‘பாரதவர்ஷம்' என்று அழைப்பாராயினர். குமரிநாடு கடல்கொண்டபின் அங்கிருந்த தமிழர்களே வடநாடுவரையிற் சென்று ஆங்காங்குக் குடியேறிப் பத்துவகை அரசியலை நாட்டினார்கள். அவர்களுள் வடமதுரையில் அரசாண்ட யதுகுலத்த வர்களே பின்னர்க் கண்ணனைத் தலைவனாய்க் கொண்டு துவாரகையில் வந்து குடியேறினர்.

அவ்

யதுகுலத்தவரில் ஒரு பகுதியாரே பெயர்த்துந் தமிழ்நாட்டிற் போந்து எருமையூரிற் குடியேறினர்'.எருமையூரிற் குடியேறிய யதுகுலத்தவராகிய வேளிர்க்குத் தலைவனே புறநானூற்றிற் கூறப்படும் இருங்கோவேள் என்னும் மன்னன்

ஆவன். இவ்வாறு இவர்போற் றமிழ்நாட்டினும்

ம்

ம்

பிறநாடுகளினும் அந்நாளிற் பரவியிருந்த வேளாள மன்னர்கள் வரலாறுகளை உரைக்கப்புகின் இது மிக விரியும். இத்தமிழ் வேளாள அரசர்களையே பழைய வடமொழி வேதங்களும் உபநிடதங் களும் 'ராஜந்யர்,' 'ராஜந்யர்,' 'க்ஷத்திரியர்' என்னும் பெயர்களாற் குறிப்பவாயின என்பதற்கு, மனு திராவிடர்களை ‘க்ஷத்திரியர்’ என்று கூறுதலே (10, 43, 44) சான்றாம்?. தமிழ வேளாளரில் உழவுதொழில் செய்தாரும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றாருமே வட நூல்களில் 'வைசியர்' என்று நுவலப்படுவாராயினர். இவ்வாறு காட்டப் பட்ட க்ஷத்திரியரும் வைசியருமாகிய தமிழ வேளாளரே தொன்று தொட்டுச் சிவபிரானை வணங்கி வருபவராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/104&oldid=1591768" இலிருந்து மீள்விக்கப்பட்டது