பக்கம்:மறைமலையம் 29.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

  • மறைமலையம் -29

இருத்தலின், அம்மக்கட் பிரிவினர் ஐவரையுங் காப்பவர் 'சோமன்' என்னும் சிவபிரானாக இருக்குவேதம் புகலுவ தாயிற்றென்க. எனவே, இருக்குவேதத்திற் பலப்பல பதிகங்கள் இயற்றிய க்ஷத்திரிய வைசியர்கள் அனைவரும் தமிழ வேளாளர்களே யாதலைத் தெற்றென உணர்ந்து கொள்க.

வாயு

இவ்வாறு க்ஷத்திரிய வைசியராகிய வேளாளர்களும், இவர் தமக்குக் குற்றேவற்றொழில் புரிவாரான சூத்திரரும், மற்றை ஆரியரும் கலந்து வேதங்களையும் பிராமணங் களையும் பன்னிரண்டு உபநிடதங்களையும் ஆக்கிவைத்த காலத்திற், பிறப்பளவில் தமக்குள் உயர்வுதாழ்வுகாணாது, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நால்வேறு தொழில் களையுஞ் செய்துகொண்டு உண்ணல் கலத்தல்களில் ஏதொரு வேறு பாடுமின்றி ஒருமித்து வாழ்ந்தனராகலின், அக் காலத்திற் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கொள்ளும் சாதிவேற்றுமை சிறிதுமில்லையென்று தெளிக. இதனாலன் றோ புராணமும் (8, 890 - 193) “தீயவனுக்கு, மனத் தூய்மை இழந் தவனுக்கு வேதங்களும், அவற்றின் சடங்கு களும் வேள்விகளும் பட்டினிகிடத்தலும் தென்புலத்தார் கடனிறுத்தல் முதலான வினைகளும் பயனைத் தருகின்றில; அகத்தே இழிந்த இயற்கையுடையவனா யிருப்போன் புறத்தே எத்துணை முயற்சியோடு சடங்குகளைச் செய்தா னாயினும், அவை சிறிதும் பயன்படா. ஒருவன் அழுக்கு நெஞ்சத்தோடு தனக்குள்ள பொருள் முழுதுங் கொடுத்தா னேனும், அதனால் நன்மை எய்தமாட்டான்; ஆதலால், நல்ல தன்மையே உயர்ச்சிக்கு ஏதுவாகும்'. என்று கூறுவதாயிற்று.

(8,890

னி, மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டதாகிய புருட சூத்தத்திலும், அதற்கும் பிற்பட்டதாகிய பிருகதாரணியக உபநிடத்திலும் (1, 4, 15) நால்வகைச் சாதிப்பெயர் காணப் படினும், முன்னையதில் அந் நாற்சாதியினரும் ஒரு முழுமுதற் கடவுளின் பிள்ளைகளாதலும், பின்னையதில் அந் நாற்சாதி யினரிடத்தும் இறைவன் நிறைந்து விளங்குதலும் நன்கு வற்புறுத்து உரைக்கப்படுதலின், இந் நூல்கள் தோன்றிய காலத்தில் நால்வகைச்சாதிகள் இருந்தமை பெறப்படினும், அவருள் உயர்வு தாழ்வுகள் இருந்தமை புலனாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/105&oldid=1591769" இலிருந்து மீள்விக்கப்பட்டது