பக்கம்:மறைமலையம் 29.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

81

வேத

பிராம ாமணங்கள் தோன்றுவதற்கு முற்பட் காலத்தில் பூணூல் அணியும் வழக்கங் காணப்படாமையால், அதுபற்றி யுண்டான சாதிவேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபதபிராமணத்திலும் (2, 4, 2), கௌஷீதகி உபநிடதத்திலுமே (2,7) பூணூல் அணியுங்குறிப்பு முதன்முதற் காணப்படுகின்றது. இவ்விரண்டிலுங்கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்குங் காலைப்பொழுதிலும், வேள்விவேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் வழக்கம் நன்கு தெரித்தோதப் பட்டமையால், இந் நூல்கள் உண்டான காலத்திலும் சாதிவேற்றுமையின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லை யென்பதும், இறைவனை வழிபடுந் தொழிலிற் புகுந்திருப்போர் அத்தொழிலிற் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போதற்கு ஓர் அடையாளமாகவே அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்திருந்தனரென்பதும் இனிது விளங்கும். மற்று

6

இக்காலத்திலோ இறைவனை வணங்காமல், உலகியற் றொழில்களையே அல்லும் பகலும் புரிந்து தமது வயிற்றுக்கும் தம்மைச் சேர்ந்தாரது வயிற்றுக்குமே பாடுபட்டு உழன்று தீவினைகளை ஈட்டுவோர் எந்நேரமும் அப்பூணூலை அணிந்துகொண்டு தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி இறுமாந்து ஐயகோ! மேன்மேற் றீவினைகளைப் பெருக்கி ருகின்றனரே! அது கிடக்க.

அடிக்குறிப்புகள்

1. See R.T.H. Griffith'S English translation of the Rig Veda, Vol. I. p. 10, foot

note.

Vedic India by Zenaide A. Ragozin, pp. 323-329.

இருக்குவேதம், 7, 18.

2.

3.

4.

5.

See A History of Civilisation in Ancient India, by R.C. Dutt, Vol. I. 219. Ibid. VII. II. p. 86.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/106&oldid=1591770" இலிருந்து மீள்விக்கப்பட்டது