பக்கம்:மறைமலையம் 29.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இயல் - 2

பழைய உபநிடதங்கள் இதிகாசங்களில் சாதி இல்லை

இனி, ஈசகேன கடம் முதலான பழைய பன்னீ நிடதங்களிற் பல தோன்றிய காலத்தும் நால்வகைச் சாதி வகுப்பு மிகுதியாய்க் காணப்படாமல், பிராமணர் ராஜந்யர் என்னம் இரண்டு பிரிவுமட்டுமே அடுத்தடுத்துக் காணப் படுகின்றது. இவ்விரண்டு பிரிவும் அவ்வவர் தொழில் பற்றி வந்தனவே யல்லாமல், அவர் தமக்குள் எவ்வகையான வேறுபாடேனும் இருந்தமைபற்றி வந்தன அல்ல. வேள்வி வேட்டலும் நூல் ஓதுதலுமாகிய தொழில்களைச்செய்பவர் பிராமணர் என்றும், போர் புரிதலும் நாடு காத்தலுமாகிய தொழில்களைச் செய்பவர் ராஜ்ந்யர் அல்லது சத்திரியர் என்றும் தொழில்களையே செய்ய வேண்டு மென்னும் கட்டுப்பாடு சிறிதும் இருந்ததில்லை. துரோணரும் அவர் ஆசிரியர் அக்கினிவேசரும் அவர் புதல்வர் அசுவத்தாமரும் அவர் மைத்துனர் கிருபரும் போன்ற பிராமணர் போர்த்தொழில் பயின்றமையும், பிரியமேதர் சினி கார்க்கியர்

திரையாருணி முதலான க்ஷத்திரியர் நூல்கள் ஓதிப்

பிராமணரானமையும் (விஷ்ணு புராணம், 4, 19, 9, 10) மேற்கூறியதனை நாட்டுதற்குப் போது மான சான்றாம். இவை மட்டும் அல்ல. இவ் விருவகுப்பாரும் ஏதும் வேறுபாடின்றி ஒன்றுசேர்ந்து உணவருந்தியும், பெண் கொண்டு கொடுத்தும் ஒருமையாய் வாழ்ந்து வந்தார்கள். சர்யாத அரசன் புதல்வி க சுகன்யையைச் சயவநர் மணந்தமை சதபதபிராமணத்திற் சொல்லப்பட்டது; ரதவீதி அரசன் புதல்வியைச் சியாவாசுவர் மணந்தமை இருக்குவேதத்தில் (5, 61) சொல்லப்பட்டது. விதர்ப்பன் என்னும் க்ஷத்திரியன் புதல்வியை அகத்தியர்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/107&oldid=1591771" இலிருந்து மீள்விக்கப்பட்டது