பக்கம்:மறைமலையம் 29.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

83

மணந்துகொண்டார்; உலோமபாதன் புதல்வியை இருசிய சிருங்கர் மணந்துகொண்டார்; (மாபாரதம்); இங்ஙனமே ராஜந்யர் புதல்விகளைப் பிராமணர் மணந்துகொண்ட வரலாறுகள் இன்னும் எண்ணிறந்தன இருக்கின்றன. இனிப் பிராமணர் புதல்விகளை மற்றை வகுப்பாரான ராஜந்யர் மணந்துகொண்ட வரலாறுகளும் பல இருக்கின்றன. சுக்கிராச்சாரியார் என்னும் பிராமணர் தேவயாநீ என்னும் தம் புதல்வியை யயாதி என்னும் அரசனுக்குக் கொடுத்தார்; மற்றொரு பெண்ணை அனூகனுக்குக் கொடுத்தார் (மாபாரதம்). இழிகுடிப்பிறந்த அக்ஷமாலை என்னும் பெண்ணை வசிட்டரும் சாரங்கியை மந்தபாலருங் கூடினமை மனுமிருதி (9, 22) இற் சொல்லப்பட்டது.

ங்ஙனமே ஞானோபதேசங்களும் வேற்றுமையின்றிச்

செய்யப்பட்டு வந்திருக்கின்றன. விதேகமன்னனாகிய ஜனகன் சுவேதகேது அருணேயர், சோமசுஷ்மசாத்யயஞ்ஞி, யாஞ்ஞவல்கியர் முதலான பார்ப்பன முனிவர் பலர்க்கு ஞானோபதேசஞ் செய்தனன் என்று சதபதபிராமணம் (10, 6, 2, 1) புகல்கின்றது; காசிமன்னனாகிய அஜாதசத்துரு என்னும் அரசனால் பாலாகி என்னும் பிராமணரிஷி ஞானோபதேசஞ் செய்யப்பட்ட வரலாறு பழைய கௌஷீதகீ பிராமண உபநிடதத்திற் (4,1) காணப்படுகின்றது. பாஞ்சால மன்னனாகிய பிரவாகநஜைவலி என்பான் சுவேதகேது அருணேயர்க்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தினமை, சதபதபிராமணம் (14,9,1, 1), பிருகதாரணியக உபநிடதம் (6, 2,1), சாந்தோக்கிய உபநிடதம் (5, 3, 1) முதலியவற்றில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது. இவ்வுண்மைகளால் இருக்குவேதத்திற்குப் பிற் பழைய உபநிடதங்கள் எழுந்த காலத்திலும் பிராமணர் க்ஷத்திரியர் என்னும் இரண்டு வகுப்பே இருந்தன வென்பதும், அவ்விரண்டு வகுப்புந் தொழில் பற்றி உண்டாயினவே யல்லாமற் பிற்காலத்திற்போலப் பிறப்பளவால் உண்டாயின வல்ல வென்பதும், அவ்விரு வகுப்பாரும் தமக்குள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களால் ஒருமித்து வாழ்ந்தனர் என்பதும் இனிது விளங்கும்.

இனிப்

புராணங்கள்

திகாசங்கள்

பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/108&oldid=1591772" இலிருந்து மீள்விக்கப்பட்டது