பக்கம்:மறைமலையம் 29.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

  • மறைமலையம் -29

சடங்குகளும் இவர்களில் எவர்க்கும்

விலக்கப்பட்டனவல்ல.’

""

எப்போதும்

ஐந்தாம் வேதமாகிய பாரதத்திலே பாரத்துவாசரு பிருகுவும் உரையாடியதாகப் பெறப்பட்ட இந்தப் பகுதி யினாற் சாதிவகுப்பு ஒழுக்கத்தினால் வகுக்கப்பட்டதே யல்லாமற் பிறப்பினால் அன்றென்பது இனிது விளக்கப் பட்டிருக்கின்றது.

அக்காலங்களில், உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர். பிறப்பினால் இழிந்தவராயிருப்பினும், அவர் உண்மைபேசுதலிற் பிறழாதவராயின் அவரே பார்ப்பனராகப் பாராட்டப்படுவாராயினர். இது சாந்தோக்கிய உபநிடதத்திற் (4,4, 1-5) போந்த சத்தியகாமஜாபாலன் கதையினால் நன்குவிளங்கும்; அது வருமாறு:

“ஜபாலா என்பவரின் மகனாகிய சத்தியகாமன் என்பான் தன் அன்னையை நோக்கி, 'அம்மா, நான் பிரமசாரிய ழுக்கத்தை மேற்கொள்ள விரும்புகின்றேன். நான் எந்தக் குடும்பத்திற் குரியவன்?” என்று வினவினான்.

66

அதற்கு அவள்: 'குழந்தாய், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியை என்பதை யான் அறியேன். என் இளமைக்காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்குமிங்குமாய் இருக்கையில் நின்னைக் கருக்கொண்டேன். ஆதலால், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியையென்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா; உன் பெயரோ சத்தியகாமன். ஆகவே, நின்னைச் சத்தியகாமஜாபாலன் என்று தெரிவித்துக்கொள்' எனக்

கூறினாள்.

66

அதன்பின் அவன் ஹாரிதுருமத கெளதமரிடம்போய், ஐய நான், ஒரு பிரமசரியத்தவனாய்த் தங்களிடம் இருக்க விரும்புகின்றேன். அதனாலேதான் ஐய, யான் தங்கள்பால் வந்தேன்” என்றான்:

66

அவர் அவனைநோக்கி, 'ஓ நண்பனே, நீ எந்தக் குடும்பத்திற்,கு உரியை?' என வினவினார். அதற்கு அவன், ஐயா, யான் எந்தக்குடிக்கு உரியேன் என்பதை அறியேன். யான் என் அன்னையைக் கேட்ட போது அவள், ‘எனது இளமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/111&oldid=1591776" இலிருந்து மீள்விக்கப்பட்டது