பக்கம்:மறைமலையம் 29.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

87

காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்கு மிங்குமாய் இரு க்கையில் நின்னைக் கருக்கொண்டேன். அதனால் நீ எக்குடிக்கு உரியை என்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா, நின்பெயரோ சத்தியகாமன்' என மறுமொழி தந்தாள். ஆகையால், ஐய, யான் சத்தியகாம ஜாபாலன் எனப்படுவேன் என்றான்.

66

அதன்பின் அவர் அவனைநோக்கிப், 'பிராமணன் அல்லாதவன் இங்ஙனம் உண்மைபேசுந் தகுதியுடையவன் ஆகான். குழந்தாய், ஓமவிறகு கொண்டுவா, நீ உண்மை பேசுதலிற் பிறழாமையால், யான் நினக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்துவேன்' என்றார்."

பழைய உபநிடத்திற்

சாந்தோக்கிய கதையைக்கொண்டு,

விழுமிய அறிவுநூலாகிய போந்த இவ்வரிய

பிறப்பினால் எத்தகையவராயிருப்பினும் உண்மை கூறுதலில் வழுவாதவரோ பார்ப்பனராய் உயர்குடிப் பிறப்பினராய்ப் பாராட்டப்பட்டதனை அறிகின்றனம் அல்லமோ?

இன்னும், உயர்ந்த சாதியான் எவன் என்று ஆராய்ந்து முடிவு கட்டிய வஜ்ரசூசி உபநிடத உரை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதொன்றாய் இருத்தலின் அதனையும் இங்கே மொழிபெயர்த்துக் காட்டுவாம்:

66

‘அறியாமையைப் போழுவதும், அறிவிலாரை இழித்துத் தய்வவுணர்ச்சி யுடையோனை உயர்த்துவதும் ஆகிய வஜ்ரசூசி என்னுங் கருவி ஈதெனத் தெரித்துரைக்க இப்போது புகுகின்றேன்.

"பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் என நால்வகைச் சாதியினர் உளர். அவர்களுட் பிராமணரே மிகச் சிறந்தோராவரென்று வேதவுரைகளுக்குப் பொருத்த மாகவே ஸ்மிருதிகளும் புகலுகின்றன.

66

ஆதலால் இஃது ஆராயற்பாலதா யிருக்கின்றது. பிராமணன் என்னுஞ் சொல்லால் நுவலப்படுவது யாது? அஃது ஓர் உயிரா? அல்லது அஃது ஓர் உடம்பா? அஃது ஒரு வகுப்பா? அல்லது அஃது ஒரு ஞானமா? (அறிவா?). அன்றி அஃது ஒரு கர்மமா? (வினையா?) அல்லது அஃது ஒரு தருமத்தை (அறத்தைப்) புரிவோனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/112&oldid=1591777" இலிருந்து மீள்விக்கப்பட்டது