பக்கம்:மறைமலையம் 29.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

89

அங்ஙனமாயிற், கர்மம் (வினை) பிராமணனா? அன்று. பிராரப்தம் (கழிந்தவினை), சஞ்சிதம் (எச்சவினை), ஆகாமியம் (ஏறும்வினை) என்னுங் கர்மங்கள் எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையவாய் இருத்தலானும், கர்மத்தினால் ஏவப் பட்டே எல்லாமாந்தர்களும், தத்தம் வினைகளைச் செய்தலானும்

கர்மம் பிராமணனாகமாட்டாது.

அற்றேல், அறத்தைத் (தர்மத்தைச்) செய்பவன் பிராமணனா? அல்லன். பொன்னை வழங்கினோர் க்ஷத்திரி யோரிலும் மற்றையோரிலும் பலர் உளராகலின், அறத்தைச் செய்வோன் பிராமணன் ஆகான்.

யாவன்?

அவன்

எவனாய்

அவ்வாறாயின் உண்மையிற் பிராமணன் என்போன் இருப்பினும், தன் உயிர்க்கு உயிராயிருக்கும் இறைவனை உணர்ந்தோனே, தன்னோடு ஒத்த இரண்டாவ தொரு பொருள் இல்லாததாய்ச் சாதியுஞ் செயல்களும் அற்றதாய் அறுவகை மாறுதல்களும் அறுவகைக் கறைகளாகிய குற்றங்களும் நீங்கியதாய் உண்மையும் அறிவும் இன்பமும் என்றுமுள்ள தன்மையும் உடையதாய்த் தன்னில் ஏ தொரு மாறுதலும் இல்லதாய் எல்லாக் கற்பங்களுக்கும் அடிப்படையாய் எல்லாப் பொருள் களையும் ஊடுருவிக் கொண்டு இருப்பதாய் வான்வெளி போல் எல்லாப்பொருள் களின் உள்ளும்புறம்பும் நிறைந்து நிற்பதாய்ப் பகுக்கப்படாதஇன்ப உருவினதாய் வழியளவையின் வைத்து அறியப்படாததாய் உயிரினால் நேரே உணரப் படுவதாய்த் தன்னுள் விளங்கும் பரமான்வை (முழுமுதற் பொருளை)த் தன் உள்ளங்கையின் நெல்லிக்கனிபோல் நேராக உணர்ந்தோனே, தான் விழைந் ததைப் பெற்றமையால் உலகத்துப் பொருள்களையும் இன்பங்களையும் விழையும் குற்றங்கள் அற்றோனே, இருவினை யொப்பு முதலான உயர்ந்த தன்மைகள் வாய்ந்தோனே, மனஅசைவு பொறாமை உலகத்துப் பொருள்களில் அவா விருப்பு மயக்கங்களில் நீங்கினோனே, தற்பெருமையாலும் தற்செருக்காலும் தீண்டப்பெறாத உள்ளத்தோனே, மொத்த மாய் இவ்வெல்லா இயல்புகளும் அவற்றை யடைதற்குரிய வழிகளும் ஒருங்கு உடையோனே பிராமணன் ஆவன்.

66

"வேதங்கள், மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களின் கருத்து இப்படித்தான் இருக்கின்றது. இவ்வாறன்றி ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/114&oldid=1591779" இலிருந்து மீள்விக்கப்பட்டது