பக்கம்:மறைமலையம் 29.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 29

பிராமணனது நிலையை அடைதல் முடியாது. ஒருவன் தன்னுள்ளிருக்கும் பரமான்மாவைச் சச்சிதானந்த (உண்மை யறிவின்ப) உருவிற்றாக இரண்டற்ற பிரமமாக வைத்து நினைத்தல்வேண்டும். ஆம், தன்னுள்ளிருக்கும் பரமான்வைச் சச்சிதானந்த பிரமமாக வைத்தே நினைத்தல் வேண்டும். இத்தகையதுதான் இவ்வுபநிடதம்."

சாமவேதத்தின்

பாலதாகிய

இவ்

வஜ்ரசூசி

உபநிடதமானது பிறப்பளவினால் எவனும் உயர்ந்த சாதியான் ஆகமாட்டான் எனவும், புனிதத்தன்மையும் முழுமுதற்கடவுளை யுணர்ந்து அதனை வழிபடும் விழுமிய ஒழுக்கமுமாகிய செயற்கை வகையினாலேயே எக்குடிக் பிறந்தவனாயிருப்பினும் அவன் உயர்ந்த சாதியான் ஆகின்றான் எனவும் ஆராய்ந்து வரையறுத்து எல்லா நூல்களின் கருத்தும் அதுவேயென முடிந்த முடிபை வலியுறுத்திச் சொல்லுதலின் பிறப்பளவிற் சாதியுயர்வு கொள்ளுதல் வேதம் முதலாகிய எந்தநூலுக்கும் உடன்பாடு அன்றென்பது நன்குபெற்றாம்.

அடிக்குறிப்புகள்

6

1.

ஆபஸ்தம்ப தர்மசூத்திரம், 2, 2, 3, 4-9

2. வாயுபுராணம், 8, 161- 165.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/115&oldid=1591780" இலிருந்து மீள்விக்கப்பட்டது