பக்கம்:மறைமலையம் 29.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

இயல் - 3

மிருதிகளிற் சாதிப்பிரிவும் ஒழுக்கம் பற்றியதே

இனி, ஆபஸ்தம்பர், கெளதமர், வசிஷ்டர், போதாயநர், மநு முதலாயினார் தருமசாத்திரங்களும் மிருதிநூல்களும் ஆக்கிய காலந்தொட்டே நால்வேறு சாதிவகுப்பும், அவ்வவர்க் குரிய தொழில்களும் வரையறுத்து உரைக்கப் பட்டன. அவ்வாறு அவை வகுத்து உரைக்கப்பட்ட விடத்தும் உயர்ந்த தொழில்களைச் செய்வோரே உயர்ந்த சாதியாராகவும், இழிந்த தொழில்களாக அவர்களாற் கருதப்பட்டவைகளைச் செய்வோரே இழிந்த சாதி யாராகவும் வைக்கப்பட்டன ரல்லாமற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை மேற்கூறிய தரும சூத்திரங்கள் மிருதி நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்பட வில்லை. உயர்ந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடித்துச் செய்தற் குரியோர், அவற்றினின்றும் வழுவுவராயின் அவர் இழிந்த சாதி யினராகவே அவற்றுள் ஐயந்திரிபுக்கு இடனின்றிச் சொல்லப்பட் டிருக்கின்றனர். வாசிஷ்ட தரும சூத்திரம்,

“பிராமணனாவது க்ஷத்திரியனாவது கற்கள், உப்பு, சணல், பட்டு, சணற்றுணி, தோல் முதலியவைகளை விற்றல் ஆகாது; சாயம் ஏற்றிய புடைவைகளும் விற்றல் கூடாது; சமையற்செய்த வுணவும், பூக்கள் பழங்கள் கிழங்குகள் மண்ப்பண்டங்கள் உணவுக்கு நறுமணச்சுவை ஏற்றும் பொருள்கள் முதலியனவும், தண்ணீர் பூண்டுகளி லிருந்து இறக்கிய சாறு முதலியனவும் விற்றல் கூடாது; சோமப் பூண்டு படைக்கலங்கள் நச்சுப்பண்டங்களும் விற்றல் ஆகாது; இறைச்சியாவது பாலாவது அவற்றால் அமைக்கப் பட்ட உணவாவது, தகரம் செம்மெழுகு ஈயம் முதலியன வாவது விற்றல் கூடாது” (2,24-27) எனவும், “வேதத்தை ஓதாதவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/116&oldid=1591781" இலிருந்து மீள்விக்கப்பட்டது