பக்கம்:மறைமலையம் 29.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

-

மறைமலையம் - 29

அதனைப் பிறர்க்குக் கற்பியாதவரும் அழல் ஓம்பாதவர்களும் ஆன பிராமணர்கள் சூத்திரை ஓத்தவரா கின்றனர்; வேத உணர்ச்சி யில்லாதவனைப் பிராமணன் என்று அழைத்தல் ஆகாது; வியாபாரஞ்செய்து பிழைப்ப வனையும், நாடகம் ஆ ஆடுவோனையும், சூத்திரர்க்கு ஏவல் செய்வோனையும் கள்வனைப்போற் பிறர்பொருளைக் கவர்வோனையும், மருத்துவஞ்செய்து பிழைப்போனையும் அங்ஙனமே பிராமணன் என்று கூறுதல் ஆகாது; தமக்குரிய தூய கடமைகளைச் செய்யாமலும், வேதம் அறியாமலும் ஐயம் ஏற்றுப் பிழைக்கும் பார்ப்பனர்கள் இருக்கும் ஊரை அரசன் ஒறுத்தல் (தண்டித்தல்) வேண்டும்; ஏனெனில் அத்தகைய ஊர் கொள்ளைக்காரருக்கு உண்டிகொடுக் கின்றது. தம்முடைய புனிதக் கடன்களை நிறைவேற்றாமலும், வேதத்தை அறியாமலும், பிராமணன் என்னுஞ் சாதிப்பெயர் ஒன்றைமட்டுங் கொண்டு பிழைப்பைத்தேடும் பிராமணர் பல்லாயிரம்பேர் ஒருங்குகூடினாலும், அவர்கள் அறங்கூறும் அவையத்தார் ஆகமாட்டார்கள்” (3, 1-5) எனவும் வற்புறுத்துரைக்கின்றது. இதற்கு இசையவே கௌதம தருமசூத்திரமும் (7, 8-21), மநு மிருதியும் (12,114) புகலாநிற்கின்றன.

நால்வகைச் சாதிகளும் அவற்றிற்குரிய கடமைகளும் வரையறுத்துப், பார்ப்பனரை வரைகடந்து உயர்த்தி, ஏனை மூவரையும் அவருட் கடைப்பட்ட சூத்திரரையும் இழித்துப், பெருந் தொகையினரான இந்துமக்களை இழிந்த சூத்திர வகுப்பிற் சேர்த்து, அவர்களைக் கல்வியிலும் நாகரிகத்திலும் தலையெடுக்க வொட்டாமல் நசுக்கிப், பன்றி நாய் கழுதை முதலான விலங்கினங்களிலும் அவர்களைத் தாழ்த்தி, நினைப்பினும் நெஞ்சம் நடுங்குங் கொடுந் தண்டனைகளை (ஒறுத்தல்களை)ச் சிறிதும் இரக்கமும் ஈர நெஞ்சமும் இன்றி அச் சூத்திரர்க்கு மட்டுமே ஏற்படுத்திச், சாதிப்பிரிவுகளுக்கு அழுத்தமான அடிப்படைகோலிய தருமசூத்திரங்கள் மிருதிகளுங்கூடப் பிறப்பளவில் ஒருவனைப் பிராமணனாகக் கூறுதற்கு ஒருப்படாதிருக்கத், தாம் அந்தண அரச வணிக வகுப்புகளுக்கு உரியவர்களாயிருந்தும் அவ்வுண்மையை அறிந்துகொள்ளுதற்கு ஏற்ற கல்வியறிவும் ஆராய்ச்சி யுணர்வும் இன்றிக், கிறிஸ்துவர் ‘அஞ்ஞானி' என்றழைத்தால் அதன்

சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/117&oldid=1591782" இலிருந்து மீள்விக்கப்பட்டது