பக்கம்:மறைமலையம் 29.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

93

இழந்த பொருளை யறியாமல் அதனைத் தனக்குரிய உயர்ந்த பட்டப்பெயராகக் கருதித் தன்னைத்தானே ‘அஞ்ஞானி' என்று சொல்லிக்கொள்ளும் புலையனைப் போலத், தம்மைப் பார்ப்பனர் 'சூத்திரர்' என்றழைத்தால் அச்சொல்லின் இழிந்தபொருளை யறியாமல் தாமுந் தம்மைச் ‘சூத்திரர்’

எனவுஞ் ‘சற்சூத்திரர்

எனவுஞ் சொல்லிக் கொள்ளும் போலிச்சைவர்கள் மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவர் ஆதல் யாங்ஙனம்? நால்வகை மக்கட்பிரிவினரில் மிக உயர்ந்தோராகக் கருதப்பட்ட பார்ப்பனருக்கே பிறப்பளவில் உயர்ச்சி கைகூடாதாயின், அந் நால்வகை யினரிலுங் கடைப்பட்டசூத்திர வகுப்பினராகத் தம்மைத்தாமே ஒப்புக்கொண்ட போலிச் சைவர்கள்மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவராதல் யாங்ஙனம்? மனுமிருதி எட்டாம் அத்தியாயத்தில் (413 - 415).

66

ஒரு சூத்திரன் விலைக்கு வாங்கப்பட்டாலும் விலைக்கு வாங்கப்படாவிட்டாலும், அவனை அடிமைவேலை செய்யும்படி ஒரு பார்ப்பனன் கட்டாயப்படுத்தலாம்; ஏனென்றால், அவன் பார்ப்பனனுக்கு அடிமையாயிருக்கும் படி கடவுளாற் படைக்கப்பட்டான்.'

தன் தலைவனால் விடுவிக்கப்படினும் ஒரு சூத்திரன் தன் அடிமைத் தன்மையினின்றும் விடுவிக்கப்பட்டவன் அல்லன்; அஃது அவனுக்கு இயற்கையாய் இருப்பதனால், அவனை அதனினின்றும் யார்தாம் விடுவிக்கக்கூடும்?

"சண்டையில் வென்று சிறையாகப்பிடித்துக் கொணரப் பட்டவன், தன் அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ்செய்பவன், தன் வீட்டில் தன் வேசிக்குப்பிறந்தவன், விலைக்கு வாங்கப்பட்டவன், பிறராற் கொடுக்கப்பட்டவன், தன் முன்னோர் காலந்தொட்டுத் தனக்கு அடிமைப் பொருளாய் வருபவன், குற்றத்திற்காக அடிமைப்படுத்தப்பட்டவன் எனச் சூத்திரர் எழுவகைப்படுவர்.” என்று சூத்திரர் இன்னா ரென்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது.தம்மைச் சூத்திரர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் போலிச் சைவர்கள், மேலே மனு சொல்லிய எழுவகைச் சூத்திரரில் எந்த வகையிற் சேர்ந்தவர்களோ அதனை அவர்களே எடுத்துச் சொல்லக் கடவர். அவ்வேழுவகையில் அவர்கள் எதிற்சேர்ந்தவரா யிருந்தாலும் இருக்கட்டும் அவர்கள் தம்மைச் சூத்திரர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/118&oldid=1591783" இலிருந்து மீள்விக்கப்பட்டது