பக்கம்:மறைமலையம் 29.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

99

தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உயிர்வாழ்ந்தமையினைச் சற்று முன்னே குறித்தேமாக லானும் அவர்கள் இவ் விந்தியநாட்டுட் புகுந்து வைகிய நெடுங்காலம் வரையில் அந்நாற்சாதிப் பிரிவினை அறியாரா யிருத்தமை நன்கு பெறப்படும். அவர்கள் வருதற்குமுன்னரே வடக்கே இமயமலை வரையிற் பரவியிருந்த தமிழ் மக்களோடு, இதனுட்புகுந்த அவ்வாரியர் இதன்கண் இருப்பிடம் பெறுதற்பொருட்டு நெடுகப் போராடிக் கொண்டிருந்த காலம்வரையில் தம்மை 'வெண்ணிறமுடைய ஆரியர்' எனவும், தம்மை எதிர்த்துத் தடைசெய்த தமிழர்களைக் 'கருநிறமுடைய தாசர்கள்' 6 எனவும் இருவகைப்படுத்தே ஓதிவந்தனர்'. இங்ஙனம் இருவகை நிறவேறுபாடுபற்றி வந்தமையினாலேயே முதன் முதற் சாதியானது 'வர்ணம்' என்னும் பெயரால் வழங்கப்பட்டது. வர்ணம் என்னும் பெயரால் முதன்முதல் உண்டான சாதியானது இந்திய நாட்டுக்கும் புறம்பேயிருந்து வந்த வெண்ணிறத்தினரான ஆரியரையும், இவ்விந்தியநாட்டுக்குள் முன்னரே யிருந்த தமிழரிற் கருநிறமுடைய குறிப்பதொன்றாய் இருந்தது.

அவர்தம் ஏவலாளரையுங்

ங்கே நினைவிற் பதிக்கற்பாலது ஒன்று உளது; தமிழர் எல்லாருங் கரியநிறத்தினர் அல்லர். அவருள் நூல் ஓதும் அந்தணரும், அரசவகுப்பாரும், உழுவித்துண்ணும் சைவ வேளாளக் குடியினரும் வெயிற் படாமற் கோயில்களிலும் அரண்மனைகளிலும் மாளிகை வீடுகளிலும் உறைந்து வருபவர்களாதலின் அவர்களிற்பலர் பொன்னிறத் தினராயும் மற்றும்பலர் செந்நிறத்தினராயும் இன்னும்பலர் பழுப்பு நிறத்தினராயும் வேறுபலர் மாந்துளிர் நிறத்தினராயும் உளர்; இவரல்லாத உழுதுண் வேளாண் குடியினரும், மற்றைக் கைத்தொழில்புரியும் பதினெண் குடிமக்களும், அரசனது படையிற் போர்த்தொழில் பயிலும் மறவரும் கடுமுயற்சி யுடையவர்களாய்ப் பெரும்பாலும் வெயிலில் நிற்றலின் இவர்கள் மட்டுமே கருநிறமுடையராயிருக் கின்றனர். இந்தியநாடு பகலவன் செல்லும் சூடுமிகுந்த நடுக்கோட்டின் (Equator) அருகில் இருத்தலால் வெயில் வெப்பம் மிகுதியும் உடையதாயிருக்கின்றது; எவ்வளவு அழகிய நிறமுடைய ராயினும் அவர் சிலநாட்கள் வெயிலில்நின்று உழைப்பராயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/124&oldid=1591789" இலிருந்து மீள்விக்கப்பட்டது