பக்கம்:மறைமலையம் 29.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

101

ஒன்றால் (1, 42) நன்கு புலனாகின்றது. அப்பதிகத்தை இங்கே மொழிபெயர்த்து உரைக்கின்றாம்;

ஓ பூஷனே, எங்கள் வழிகளைச் சுருங்கப்பண்ணுக, வழியிலுள்ள இடையூறுகளை அப்புறப்படுத்துக; வானிற்பிறந்தோய், எமக்குமுன்னே எம்மை அணுகிச்செல்க. பூஷனே, எமது வழியினின்றும் ஓநாயை, நன்மையற்ற கெட்ட ஓநாயைத் துரத்துக:

அஃது எம்மைத் துன்புறுத்துதற்குப் பதுங்கியிருக்கின்றது. நாங்கள் செல்லும் வழிப் பக்கமாய்க் கொள்ளைக்காரன் கள்ள நெஞ்சத்தோடும் ஒளிந்திருக்கின்றான்:

அவனைப் பாட்டையினின்றும் எட்டத் துரத்திக்கொண்டுசெல்க. இரட்டைநா உடைய அப் பொல்லாதவன் எவனா யிருப்பினும்,

அவனிடமுள்ள கொள்ளிக்கட்டையை நின் அடிகளினால் மிதித்துத் தேய்த்துவிடுக.

அறிவான்மிக்க பூஷனே, புதுமைகளைச் செய்வோய், பழைய எம்முன்னோர்க்கு உதவிபுரிந்த நின்துணையை எமக்கும் இப்போது உரியதாக நின்னை நாடுகின்றோம்.

ஆகையாற், செல்வமெல்லாவற்றிற்கும் தலைவ, பொன்னிறமான கத்தியை நன்கு சுழற்றுவோய்,

செல்வத்தைப் பெறுதல் எளிதாகுமாறு செய்க.

எம்மைப் பின்றொடர்வோர்க்கு முன்னதாக எம்மைக் கடத்தி நடத்துக, எமது வழியை இனியதாக்குக, அதனை மிதிப்ப தற்கு நேர்த்தியாக்குக:

ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத் தேடுக.

புற்கள் செழுமையா யிருக்கும் புல் நிலங்களுக்கு எம்மைச்

செலுத்துக: எமதுவழியில் முன்நேரத்திலேயே வெப்பத்தை விடாதே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/126&oldid=1591791" இலிருந்து மீள்விக்கப்பட்டது