பக்கம்:மறைமலையம் 29.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள்

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

பாடியபாட்டுகளும்

இருத்தல்வேண்டும்.

103

மிகப்பழையனவாகவே

டு

இவ்வாறு இந்தியநாட்டுக்குப் புறம்பே உறைந்த காலத்தில் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு அவற்றைக் காண்டே பிழைப்பவர்களாய், அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்நிலங்களைத் தேடித் திரிபவர்களாய் இருந்தமையின் அவர்கட்கு அந்நாளில் உழவுதொழில் இன்னதென்றே தெரியாது. மற்று, அவர்கட்குமுன் இவ்விந்தியநாட்டின்கண் இமயமலைச்சாரல் வரையிற் பரவியிருந்த தமிழர்களோ ஆரியர்களைப்போல் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கையில் இல்லாமல், நாகரிகத்திற் சிறந்து தாந்தாம் சென்ற இடங்களில் ஆறுகளும் ஏரிகளும் உள்ள பக்கங்களில் நிலையாகக் குடியேறி உழவுதொழிலைச் செய்து, அதனாற் செல்வம்பெருக்கி நாடுநகரங்கள் அமைத்துத், தமக்குள் அரசர்களை ஏற்படுத்தி வறுமையின்றி இனிது உயிர்வாழ்ந்தவர்களாவர். இங்ஙனஞ் செல்வத்தாற் சிறந்த நாகரிகவாழ்க்கை யுடையவர்களுக்குள்ளேதான் பலவகைத் தொழிற் பிரிவுகளும், அத்தொழில்களைச் செய்யும் மக்கட் பிரிவுகளும் உண்டாகுமேயல்லாமல், நிலையான இருப்பிடம் ஏதும் இன்றி இன்றைக்கு ஓரிடத்தும் நாளைக்கு ஓரிடத்துமாக அலைந்துதிரியும் மக்கள்பால் அத்தகைய தொழில்களும் பிரிவுகளும் உண்டாக மாட்டா.

அடிக்குறிப்புகள்

1. R.C. Dutt's “A History of Civilisation in Ancient India,” Vol. I, pp. 48-53.

2.

See Dr.R. Caldwell's “A Comparative Grammar of the Dravidian Languages,' Ist Edition, p. 512.

3.

See ‘The Arctic Home in the Vedas' by B. G. Tilak.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/128&oldid=1591793" இலிருந்து மீள்விக்கப்பட்டது