பக்கம்:மறைமலையம் 29.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

109

என்றோதிய வாகைத் திணைச் சூத்திரத்தால்', நன்கறியப்படும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்வார் பார்ப்பனராவரென்பதூஉம்; ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்வார் அரசராவ ரென்பதூஉம், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுதொழில்களைச் செய்வார் வணிகர் வேளாளர் என்னும் இருபாலாரும் ஆவரென்ப தூஉம் இனிது பெறப்படுதல் காண்க. வணிகரையும் வேளாளரையும் “ஏனோர்” என்னு

66

சொல்லால் ஒன்றாய் அடக்கி அவ்விருவர்க்கும பொதுப் பட ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் ஆறு தொழில்களையும் ஆசிரியர் தொல்காப்பியனார் வெளிப்படையாய் ஓதியிருக்க, இத் தொல்லாசிரியர்க்கு ஆயிரத்து

ஐந்நூறு ஆண்டு பிற்பட்ட வடமொழிப் பார்ப்பனரால் எழுதிவைக்கப்பட்ட வடமொழி ஸ்மிருதி நூலின் நால்வகைச் சாதியுட் கடைப்பட்ட சூத்திரச் சாதியில் வேளாளரைப் பிழைபட அடக்குவான் புகுந்த இளம் பூரணர், நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர் உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி முதலிய ஆறுமே வேளார்க்கு உரியவாகக் கூறினார். வடமொழி மிருதி நூல்களிற் சூத்திரர் என்னும் வகையில் வைக்கப் பட்டவர்கள்: "சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொள்ளப் பட்டவர்களும், தமது அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ் செய்பவர்களும், வேசிக்குப் பிறந்தவர்களும், விலைக்கு வாங்கப்பட்டவர்களும், பிறராற் கொடுக்கப்பட்டவர்களும், முன்னோர் காலந் தொட்டு தமக்கு அடிமைகளாய் வருபவர்களும் குற்றத்திற்காக அடிமைப் படுத்தப்பட்டவர்களுமே" ஆவ ரென்பதனை மேலெடுத்துக் காட்டினமாகலின், அந்தணராயும் அரசராயும் வாணிகம் உழவு நடாத்துவோராயும் பண்டு தொட்டுச் சீருஞ் சிறப்பும் உடையராய்த் தமிழ்நாட்டின்கண் வாழ்ந்துவரும் வேளாளரைச் சூத்திரவகுப்பிற் சேர்த்தல் பெரியதோர் இழுக்காதலை வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் விரித்து விளக்கினாம்; அதனை அங்கே கண்டுகொள்க. வாணிகம் நடாத்துவாரை ‘வைசியர்' என்னும் வட சொல்லால் ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/134&oldid=1591800" இலிருந்து மீள்விக்கப்பட்டது