பக்கம்:மறைமலையம் 29.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் - 29

தொல்காப்பியனார் கூறினாற்போல, வேளாளரைச்‘சூத்திரர்’ என்னும் வட சொல்லால் அங்ஙனமே அவர்யாண்டுங் கூறாமையின், அவரைச் சூத்திரராகக் கொண்டு உரைகூறிய உரைகாரரின் உரை ஆசிரியர் கருத்துக்குமாறான பிழையுரை யாமென விடுக்க. மேலும் சூத்திரர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே மிருதி நூல்களிற் கூறப்பட்டிருக்க, உழவும் நிரையோம் புதலும் ஆகிய தொழில்கள் வைசியர்க்கு மட்டுமே அவற்றுள் வரையறுத் துரைக்கப் பட்டிருத்தலானும்', வேதநூற் கல்வியும் வேள்விவேட்டலும் வைசியர்க்கும் உரியவாதல் மநுமிருதியிற் பெறப்பட்டலானும்2, தமிழ்நாட்டிலுள்ள வேளாளர்கள் பண்டுதொட்டு நூல் ஓதியும் சிவவேள்விகள் வேட்டும் உழவு வாணிகம் நடாத்தியும் ஆன்நிரையோம்பியும் ஈகையிற் சிறந்தும் வாழ்ந்துவரக் காண்டுமேயல்லாமல் ஏனையோர்க்குக் குற்றேவற்றொழில் புரிந்துவரக் காணாமை யானும் வேளாளரைச் சூத்திர ரெனக்கொண்டு அவர்க்கு அறிவுநூற்கல்வியினை மறுத்த உரைகாரருரை போலியுரையா மெனவிடுக்க. மேலும், விருந்தோம்புதற்றொழில் அந்தணர் அரசர் வணிகர் முதலான எல்லா வகுப்பினர்க்கும்

66

பொதுமையில் உரியதாகவும், அதனை வேளாளர்க்கு மட்டும் வரைப்படுத்திக் கூறியதூஉம் பொருந்தாவுரையாம் என்பது. ஆசிரியர் தொல்காப்பியனார் வணிகரையும் வேளாளரையும் “ஏனோர்” என்னும் ஒருசொல்லால் அடக்கி, அவ் விருவர்க்கும் ருமூன்று” தொழில்களைப் பொதுப்பட ஓதினாரல்லது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் தனித்தனி வெவ்வேறு ஆறு தொழில்களை ஓதிற்றிலராகலின், அவர் கருத்துக்கு மாறாக வணிகர்க்கு ஒருவகையான ஆறுதொழில்களையும் வேளாளர்க்கு மற்றொருவகையான ஆறுதொழில்களையுந் தாமே புதியவாய்க் கற்பித்துக் கொண்டுரைத்த இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகள் சான்றோராற் கொள்ளற்பாலன அல்லவென்று உணர்க.

வணிகரும் வேளாளரும் ஒரு வகுப்பினரேயென்பது ஆசிரியர்க்குக் கருத்தாயின், “வைசிகன் பெறுமே வாணிக வாழ்ககை என வைசியரை ஒருபாலாகவும், "வேளாண் மாந்தர்க் குழு தூண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” என வேளாளரை மற்றொரு பாலாகவும் வைத்து அவர் வேறுபடுத்து ஓதியதென்னையெனின்; சூத்திரர்க்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/135&oldid=1591801" இலிருந்து மீள்விக்கப்பட்டது