பக்கம்:மறைமலையம் 29.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

111

குற்றேவற்றொழில் ஒன்றுமே கூறி, ஏனை வைசியர்க்கு வாணிகமும் உழவுமாகிய தொழில்களை வரையறுத்துக் கூறுதற்கண், ஆபஸ்தம்பம், போதாயநம், மநுமுதலான வடநூலாசிரியர் எல்லாரும் ஒருங்கொத்து ஒருமுகமாய் நிற்றலின், வைசியருள்ளேயே வாணிகம் நடாத்துவோரை ஒரு பாலாகவும் உழவு நடாத்துவோரை மற்றொரு பாலாகவும் வைத்து ஆசிரியன் அங்ஙனம் சூத்திரஞ் செய்திட்டான் என்பது. ஏனைத் தொழில்கள் போலாது, வாணிகம் உழவு என்னும் இரண்டும் உலகியல் நடத்தற்கு இன்றியமையாது வேண்டப் படும் இருபெருந் தொழில் களாய்த் தலைசிறந்து நிற்றலின், அவ்விருவேறு தொழில்களைப் புரியும் வைசியரை வணிகரெனவும் வேளாளரெனவும் இருவகைப்படுத்து ஓதியது, அறிவுநூல் வழக்கோடு உலகியலறிவும் ஒருங்குவாய்த்து அகன்ற ஆசிரியன் தொல்காப்பியனது பேரறிவு மாட்சியின் பெற்றி தெரிப்ப தொன்றா மென்க. இவ்வாறு ஆசிரியன் வேளாளரை வைசிய வகுப்பின்பாற் படுத்தலொன்றின் மட்டும் அமையாது, அவரை அரச வகுப்பின் பாலும் படுக்குங் கருத்தின னென்பது,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”

என்னுஞ் சூத்திரத்தில்', அவர் அரசராற் படைத்தலைவராஞ் சிறப்பும் மாலை சூட்டப்படும் மாட்சியும் பெறுதல் கூறுதலானும்,

66

“வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுங்

தாரும் ஆரமுந் தேரும் வாளும்

மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரியடு"

என்னுஞ் சூத்திரத்தில் 2 வேளாளர் குறுநில மன்னராய் அரசாளுதற்கு உரிமையுடையராதல் கூறுதலானும் பெறுதும் என்பது. மற்று, அடியோருள்ளும் வினை வல்லோருள்ளுங் குறுநிலமன்னராவார் உளரேனும், அவர் வேளாளரைப் போற் படைத்தலைமையுங் கண்ணியும் வில் வேல் கழல் தார் ஆரம் தேர் வாள் முதலியனவும் வேந்தராற் பெறுதற்கு உரிய சிறப்பு உடையரல்லரென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/136&oldid=1591802" இலிருந்து மீள்விக்கப்பட்டது