பக்கம்:மறைமலையம் 29.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

66

மறைமலையம் - 29

அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை'

993

என்று

ஆசிரியன் தியவாற்றால் தெளியப்படும். எனவே, வணிகரையும் வேளாளரையும் “ஏனோர்” எனவும், அவரிற் கீழோரான அடியோர் வினைவலரை “இழிந்தோர்” எனவும் ஆசிரியன் யாண்டும் உரைப்பக் காண்டலின், வேளாளரை இழிந்த சூத்திரவகுப்பின்பாற் படுத்தல் ஆசிரியன் கருத்துக்கு முற்றும் மாறாமென்றும், அதனால் உரைகாரரின் உரைகள் கொள்ளற்பாலன அல்லவென்றும் மறுக்க. அற்றேல், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பகுப் பினரினும் வேறாக இழிந்தோர்’ எனப்படுதற்குரிய அடியோரையும் வினைவலரையும் ஆசிரியன் மரபியலின் ஓதிற்றிலனாலெனின்; பொருளதிகாரத்தின் முதற் கண்ண தாகிய‘அகத்திணையிய’லில்,

66

<

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்

கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்”

என ஆசிரியன் முன்னரே அவர் தம்மை ஓதிப்போந் தானாகலிற், பின்னும் அவரை ‘மரபிய' லிற் கிளந்துகூறாது இழிந்தோர்' என்னும் பொதுச்சொல்லாற் கூறினானென்க. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலத்துள்ளும் பொதுமக்கள் ஆவாருந் தலைமக்களாவாரும் அடியோர் வினைவலர் ஆவாரும் உளர் என்பதனை ஆசிரியன், “பெயரும் வினையும் என்று ஆயிருவகைய

திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே”

எனவும்,

6

66

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரும் உளவே"

6 எனவும்,

“ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலப் பெயரே"

எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/137&oldid=1591803" இலிருந்து மீள்விக்கப்பட்டது