பக்கம்:மறைமலையம் 29.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

யுண் பழைதாகிய

L

-

மறைமலையம் 29

அக்காலத்தில்

வில்லும்

இறுமாப்புக்கு இ டமாவதுமான இச் சாதிவேற்றுமையினை எங்ஙனம் உண்டாக்கினார்களெனின்; அதனையும் சிறிது விளக்கிக்காட்டுதும். உழவுதொழிலைத் தெரிவதற்கு முன் தமிழ்மக்கள் எல்லாரும் மலைகளினும் மலைக்காடுகளினும் உறைந்துகொண்டு, மான் மரை கடம்பை வரையாடு முதலான விலங்கினங்களை வேட்டம் ஆடி, அவற்றின் இறைச்சியை உயிர்வாழ்ந்தவர்களே யாவர். அவர்கள் மிகப் அம்பும் ஏந்தி வேட்டமாடிப், பிழைத்தமையினாலேதான், தாம் அந்நாளில் வணங்கிய முதற்றெய்வமாகிய முருகப்பிரானை வேட்டுவ வடிவில் மலைமேல் வைத்து வழிபட்டும், வேடன் மகளாகிய வள்ளிநாச்சியாரை அவற்கு மனைக்கிழத்தியாக மணம் புணர்த்தி வணங்கியும் வருகின்றார்கள்; வடநாட்டிற் சென்ற அக்காலத்துத் தமிழ்மக்களுந் தமது தென்னாட்டுத் தமிழ் இனத்தவரைப்போலவே அந்நாளில் வேட்டமாடி உயிர் வாழ்ந்து வந்தமையால், தாம் அஞ்ஞான்று வணங்கிய சிவபிரானுக்குங் கையில் வில்லுங் கணையும் உளவாக வேட்டுரு கற்பித்து அவனையும் மலைமேல் வைத்து வணங்கியதோடு, மலையரையன் பொற்பாவை உமைப்பிராட்டியாரையும் அவற்கு மணமகளாகப் புணர்த்தி வழிபடலாயினார். இவ்வாற்றாற் பண்டைத் தமிழ்மக்களெல் லார்க்கும் பண்டை முதற்பெருந்தெய்வம் முருகப்பிரானும் சிவபெருமானுமே யாவர் என்பதூஉங் கடைப்பிடித் துணர்ந்து கொள்க. திருமுருகாற்றுப்படை என்னும் பழைய தனிச்செந்தமிழ்ப் பாட்டில் முருகனுக்கு ஆட்டிறைச்சி வைத்துப் படைத்தமை சொல்லப்பட்டிருத்தலின்', முன்நாளிலிருந்த தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கையில் இறைச்சி தின்று வாழ்ந்தவராதல் நன்கு பெறப்படும்.

இனி, அவருள் அறிவான்மிக்கோர் சிலர் மலையைவிட்டுக் கீழ் இறங்கி ஆறும் ஏரியும் வாய்ந்த வளவிய வெளிநிலங் களில் வந்து வைகி, நிலத்தை உழுதுதிருத்தி, நெல் கோதுமை பதினெண் கூலங்கள் முதலியன வித்திவிளைத்தும், வாழை மா பலா தெங்கு முதலியவற்றைப் பயிர்செய்தும், அவற்றின் பயன்களாற் சுவை முதிர்ந்த உணவுகளை ஆக்கி உட்கொள்ளக் கற்றுக்கொண்டபின், தம்மைப்போல் இன்பதுன்ப உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/141&oldid=1591807" இலிருந்து மீள்விக்கப்பட்டது