பக்கம்:மறைமலையம் 29.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

117

யுடைய உயிர்களைப் பதைபதைக்கக் கொன்று, அவற்றின் ஊனை உண்டல் பெருந்தீவினையாமென நினைந்து, அதனை அறவே கைவிட்டார்கள். அங்ஙனம் ஊணுணவைக் கைவிட்ட பின், உயிர்க்கொலையையும் அதனால்வரும் இறைச்சியையும் அதனை உண்பாரையுங் காண அருவருப்புற்றனர்; அவரோடு அளவளாவுதற்கும் அஞ்சினர். ஆகவே, மருதநிலத்திற் குடியேறிய தமிழருள் ஊன்உண்ணாதார் ஒரு பிரிவினராகவும், ஊன் உண்பார் மற்றொரு பிரிவினராகவும் பிரிந்தனர். இங்ஙனம் முதலில் இரண்டுபிரிவுகளே உண்டாயின. புலால் அருந்தாதார் புலால் அருந்துவோரைத் தம்மிற் றாழ்ந்தவராக நினைந்து அவரை அருவருத்து விலக்குதல்போலப், புலால் உணவு காள்வோர் அது கொள்ளாதாரை அருவருத்து விலக்குதற்கு ஏது இன்மையினாலே, புலான்மறுத்த தமிழர் உயர்ந் தோராயும், அவரால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏனைத் தமிழர் தாழ்ந்தோராயுங் கருதப்படலாயினர். எனவே, முதன்முதல் மருதநிலத்துத் தமிழ்மக்களுள் உண்டான சாதி இரண்டேயா மென்பதூஉம், அவர் புலான் மறுத்தோரும் அது மறாதோருமேயாவர் என்பதூஉம், இப்பிரிவுக்கு ஏதுவா யிருந்தது கொல்லாமை புலா லுண்ணாமை யாகிய அருளொழுக்கமேயா மென்பதூஉம் எளிதின் விளங்காநிற்கும்.

6

இனி, இங்ஙனம் பிரிந்த இருதிறத்தார்க்குள்ளும் இன்னும் பல பிரிவுகள் உண்டாவதற்கு ஏதுவாயின: தூய்மையுங் கல்வியறிவுங் கடவுள் வழிபாடுமேயாகும். இவற்றுள், தூய்மையாவது அகந்தூய்மை புறந்தூய்மை என இருவகைப் படும்; இவை தம்முள அகந்தூய்மை என்பது பொய்கூறாது மெய்யே பேசுதல், பிறர்க்குள்ள உயர்ச்சிகண்டு பொறாமை கொள்ளாதிருத்தல், கண்ட கண்ட பொருள் களையெல்லாம் குற்றங்கண்ட

பற அவாவுறாதிருத்தல், பிறர்பாற்

பெற

வழியெல்லாம் சினவாதிருத்தல், பிறர்மேல் தீயசொற்களைச் சொல்லா தொழுகுதல் முதலியவற்றால் மனம் மாசியின்றி யிருப்பதாகும். இனிப், புறந்தூய்மை என்பது தன் உடம்பும், தான் உடுக்கும் உடையும், தான் இருக்கும், இடமும், தான் புழங்குங் கருவிகள் ஏனங்கள் பண்டங்கள் முதலியனவும், அழுக்கில்லாமலுந் தீ நாற்றம் வீசாமலுந் துப்புரவாய் இருக்க வைத்தல். இங்ஙனம் அகம் புறம் இரண்டுந் தூயவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/142&oldid=1591808" இலிருந்து மீள்விக்கப்பட்டது