பக்கம்:மறைமலையம் 29.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

  • மறைமலையம் - 29

இருக்கும்படி வைத்தலும், உலகநூல் அறிவுநூல்களை எந்நேரமும் ஓதுதலும், கடவுளை இடையிடையே வழிபடுதலும் முற்றும் வழுவாமற் செய்தல் அரசராயிருந்து குடிகளைப் பாதுகாப்பார்க்கும், பதினெண் டொழில் புரிவாரைத் தத்தந் தொழில்களில் ஏவி உழவு தொழிலை நடப்பிப்பார்க்கும், பல நாடுகளிலுள்ள பண்டங்களை ஒருங்கு தொகுப்பித்துங் காலினுங் கலத்தினுஞ் சென்று அயல்நாடுகளில் அவற்றை விலைப் படுத்தியும் வாணிகம் புரிவார்க்கும் இயலாமையின், அகம் புறந் தூய்மையினும் கல்வி கடவுள் வழிபாட்டினும் வழுவாது நிற்கவல்ல வேளாளர் மட்டுமே, ‘அந்தணர்’ என்னும் பெயர்க்கு உரியராய் உழுவித்துண்பாரையும் பாதுகாத்து, உலகினை ஓம்பி அகம் புறந் தூய்மை கல்வி கடவுள்வழிபாடு என்னும் இவற்றில் அந்தணர்க்கு அடுத்தபடியில் வழுவாது நிற்க வல்லராகலின், அரசர், ஏனை வணிகர் வேளாளரிற் சிறந்த சாதியாராயினர். வணிகரும் வேளாளரும் ஏனைப் பதினெண்டொழில் புரிவாரைவிட மேற்கூறிய அருளொழுக் கத்தினும், தூய்மை கல்வி கடவுள் வழிபாட்டினும் மேம்பட்டிருத்தலின், அவரும் அப் பதினெண்மரினுஞ் சிறந்த சாதியாராக வைத்துப் பாராட்டப் பட்டு வருகின்றனர்.

இனிப், புலால் உண்ணும் பதினெண்டொழிலாள ருள்ளும் அகந்தூய்மை புறந்தூய்மையில் இயன்றமட்டும் வழுவாது நிற்போருங், கல்வியுங் கடவுள்வழிபாடும் வாய்ந் தோருமே உயர்ந்த சாதியாராகக் கருதப்பட்டு வருகின்றனர். புலால் உணவு கொள்ளுதலில் உழுதுண் உழுதுண் வேளாளரும் இடையரும் அகம்படியரும் கள்வரும் மறவரும் ஒருங்கொப்ப ராயினும், அகம் புறந்தூய்மையினுங் கல்வி கடவுள் வழிபாட்டினும் உழுதுண் வேளாளரும் இடையரும் ஏனை யோரிற் சிறந்துநிற்றலின், அவர்கள் அகம்படியர் கள்வர் மறவரினும் உயர்ந்த சாதியாராகக் கருதப்படுகின்றனர். தூய்மை கல்வி கடவுள்வழிபாடு இல்லாமை யோடு, கள்ளுண்டும் விலங்குகளில் மிகத் தூயனவும் பெரிது பயன்படுவனவுமாய ஆவினையும் எருதினையும் உணவாகக் கொண்டும் நிரம்பவுந் தீய ஒழுக்கத்தினரா யிருத்தலின், பள்ளரும் பறையரும், அகம்படியர் கள்வர் மறவரினும் இழிந்தசாதியா ராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/143&oldid=1591809" இலிருந்து மீள்விக்கப்பட்டது