பக்கம்:மறைமலையம் 29.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 29

என்று அருளிச்செய்த திருக்குறட் பாக்களே (14, 3, 4) சான்றாம். திருக்குறளுக்குச் சிறிது பிற்பட்ட காலத்தாகிய நாலடியாரும்,

"நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்

சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்

ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி ஆள்வினை

என்றிவற்றின் ஆகுங் குலம்”

(195)

என்று உயர்ந்த சயல்களே உயர்குல அடையாளமாகக் கருதப்பட்டமையினை வற்புறுத்து உரைத்தல் காண்க.

இன்னும், ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில், உயர்ந்த ஒழுக்கத்தால் உயர்குலத்தவராக நன்கு மதிக்கப் பட்ட மருதநிலத்து வேளாண் குடித்தலைவர், குறிஞ்சிநிலத் தின்கண் உள்ள குறவர் குடித்தலைவரின் பெண்மக்களை மணந்துகொண்டனர். இது தொல்காப்பியங், களவியலில், “ஒத்த கிழவனுங் கிழவியுங் காண்ப

மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே”

(2)

என்று அவர் அருளிச்செய்தவாற்றால் நன்கறியக்கிடக்கின்றது. அங்ஙனங் குறிஞ்சி நிலத் தலைமகளிரை மணந்துகொண்ட வேளாண்டலைவர் அவரது இல்லத்தில் விருந்தினராய்ச் சென்றவழி அவர் தந்த உணவினை அயின்று மகிழ்ந்தமையும் ஆசிரியர் தொல்காப்பியனார்,

“புகாஅக் காலைப் புக்கு எதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்”

(களவியல், 16)

என்று (களவியல், 16) ஓதியவாற்றாற் பெறப்படும். ‘புகாக்காலை’ என்பது உணவுகொள்ளுங்காலம். இவ் வியல்புகள் எல்லாம் அச் சூத்திரங்களுக்கு நச்சினார்க் கினியர் உரைத்த உரையுள் எடுத்துக்காட்டப்பட்ட பழம் பாட்டுகளில் தெளியக்காணலாம். காணவே, பண்டைக் காலத்தில் ஒழுக்கத் தால் எத்துணை உயர்ந்த குடிப்பிறப்பினரா யிருந்தாரும், தம்மிற் றாழ்ந்த குடிப் பிறப்பினரில் மேம்பட்டு வருவாரைச் சிறிதும் ஒதுக்கிவையாது, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்து, அவரைத் தம் மினத்திற் சேர்த்துக் கொண்டு இனிது

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/145&oldid=1591811" இலிருந்து மீள்விக்கப்பட்டது