பக்கம்:மறைமலையம் 29.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் - 29 -

‘நீர் வாழ்சாதியுள் அறுபிறப்பு உரிய'

என்று மரபியற் சூத்திரத்தில் (42) சாதி என்னுஞ்சொல்லை மீனின் இனங்களைக் குறித்தற்குக் கருவியாகக் கொண்டமை காண்க. நீர்வாழ் மீன்களில் இவை வ ஆண்பால் இவை பெண்பாலென்று பகுத்தறிதற்கு ஏற்ற உறுப்பு அடையாளங்கள் உடையன உளவென்றும், அவற்றுள் ஆணுறுப்பு உடைய வாய்ப் ‘போத்து’ என வழங்கப்படுதற்கு ஏற்றவை ஆறு சாதியாமென்றும் ஆசிரியர் அச் சூத்திரத்தால் அறிய வைத்தார். ஆணுறுப்புடைய ஆறுசாதி மீன்களாவன: “சுறாவும் முதலையும் இடங்கரும் கராமும் வராலும் வாளையுமென இவை வ" என்று அதற்கு உரைகாரர் கூறியதூ உங்காண்க. எனவே, தத்தம் உடம்பின் அமைப்பால் இவை சுறா, இவை முதலை, இவை வரால், இவை வாளை எனப் பகுத்துணர்தற்குரிய இயற்கை வேற்றுமையுடைய சிற்றுயிர் களின் இனங்களே 'சாதி' எனப் பெயர்பெறுதற்கு யைந்தனவாம் என்பதூஉம், இங்ஙனம் இயற்கையிற் பிரித்துணர்தற்கு ஏலா மக்கட்பிரிவினர் அப்பெயர் பெறுதற்கு ஏலாரென்பதூஉம், அதனால் மக்களுட் 'சாதி' இல்லை யென்பதூ உம் தெய்வப் பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தாதல் பெறப்பட்டமை காண்க. இவ்வாற்றால், உயர்ந்த செயல்கள் உடையாரை உயர்ந்தோ ரென்றலும், இழிந்த செயல்கள் உடையாரை இழிந்தோ ரென்றலுமே செந்தமிழ்மறை வகுத்த தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார்க்கும், அவரது மரபு பிழையாமல் வந்த தெய்வத் திருவள்ளுவனார்க்கும், அவ்விருவரது மந்திரமொழி பேணிவந்த ஏனைத் தமிழாசிரியர் எல்லார்க்கும் ஒத்த கருத்தாதல் வெள்ளி டைமலைபோல் விளங்காநிற்கும் என்பது.

அடிக்குறிப்புகள்

1. "Their superfluous hordes of the nations which had remained nomad, precipitate themselves upon those which had already become agricultural; until, these having become sufficiently powerful to repel such inroads, the invading nations, deprived of this outlet, were obliged also to become agricultural communities.” - J.S. Mill's Principles of Political Economy, P. 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/149&oldid=1591815" இலிருந்து மீள்விக்கப்பட்டது