பக்கம்:மறைமலையம் 29.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இயல் -5

சைவ வைணவ நூல்களிலுஞ் சாதிவேற்றுமை இல்லை

L

இனிச், சைவ வைணவ ஆசிரியர்கள் அருளிச்செய்த நூல்களிலாயினும் பிறப்பளவிற் சாதிவேற்றுமை சொல்லப்பட் டிருக்கின்றதோவென ஆராய்ந்தாற்,பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டுதல் இறைவனது திருவருளைப் பெறவொட்டாமல் தடைசெய்து அங்ஙனம் அது பாராட்டுவாரை அறியாமை யிலுஞ் செருக்கிலும் ஆழ்த்தி அவர்களைத் தீராப் பெருந்துன்பச் சுழலிற் படுப்பித்து வருத்துமென்றும், சாதி வேற்றுமையினை அறவே தொலைத்து இறைவன்பால் அன்புமிக்க அடியார் எவராயிருப்பினும் அவர்பால் ஏதொரு குற்றமும் ஆராயாது அவர்க்குத் தொண்டுபூண்டு ஒழுகுதலே இம்மை மறுமை யிரண்டிலுந் திருவருட் பேரின்பத்தைத் தருமென்றும் அவ்வுண்மை நூல்களுள் வற்புறுத்துச் சொல்லப்பட்டிருக் கின்றனவே யல்லாமற், சாதிபற்றிய உயர்வு தாழ்வுகள் ஒரு தினைத்தனை யேனும் அவற்றின்கட் சொல்லப்படவில்லை. இவ் வுண்மை யினையும் அவ்வாசிரியன்மார் நிலவிய கால அடைவின் அவர்தம் திருமொழிகளினும் வரலாறுகளினும் இருத்தெடுத்து விளக்கிக் காட்டுதும்.

படியே

சைவ வைணவ ஆசிரியர் எல்லாரினும் முற்பட்ட காலத்தவரும், பாண்டிய வேந்தனுக்கு அமைச்சராயிருந்து, பின் திருப்பெருந்துறையிலே சிவபெருமான் தமது திருவுருவத் தோடும் நேரே எழுந்தருளி ஆட்கொள்ளப் பெற்றவருமான அந்தணர் குடிப்பிறந்த மாணிக்கவாசகப் பெருமான்,

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/151&oldid=1591817" இலிருந்து மீள்விக்கப்பட்டது