பக்கம்:மறைமலையம் 29.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

130

மறைமலையம் 29 -

நான்காம் ஆசிரியரும் ஆதிசைவப் பார்ப்பனருமான சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையின்கண் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன்” என அடியார் களின் பிறப்பை நோக்காமல் அவர்கள் எல்லாரையும் வணங்கினார்.

இனிச், சிவபெருமான் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்கே தனது அருளை வழங்கியது யாண்டும் இல்லை. அன்பினாற் சிறந்தவர்கள் எப்பிறப்பினராகப் பிறராற் கருதப்படினும், அதனைத் தான் சிறிதும் பாராதே அவர்களுக்கே தனது பேர் அருளை வழங்கி வந்திருக்கின்றான். இதற்குப், பெரிய புராணத்தின்கட் போந்த பல்வகைப் பிறப்பினரான அடியார்கள் எல்லாரும் அவனது திருவருளைப் பெற்றமையே பெருஞ் சான்றாம். மேலும், பிறப்பினால் தம்மை உயர்ந் தோராகக் கருதிச் செருக்கடைவோர் குறும்பை வேரோடும் அறுத்து அவரை மாய்க்க வேண்டுமென்பதே எல்லாம்வல்ல அவ்வாண்டவன் திருவுளக்குறிப்பாமென்பது, உண்மை வரலாறுகள் பலவற்றாலும் நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக் கின்றது. திருவம்பர் மாகாளத்திற் சோமாசிமாற நாயனார் தாம் செய்த வேள்வியில் இடும் அவிசைச் சிவபெருமான் நேரே வந்து ஏற்றுக்கொண்டருளல் வேண்டுமென்று தவங்கிடந்து இரந்த போது, அவ் வேள்விக் குண்டத்தைச் சூழத் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதிச் செருக்குற்றிருந்த பார்ப்பனர் அத்தனைபேர்க்கும் தனது அருளை வழங்க சையானாய், நம்பெருமான் சண்டாளப் பறையன் உருத்தாங்கி அவ் வேள்விக் குண்டத்திற்கு எழுந் தருளினான்; அதுகண்ட ஏனைப் பார்ப்பனர் எல்லாரும் 'தூய வேள்விக்களத்திற்குப் பறையன் வந்தான்' என்று சொல்லி ஓடிப்போக, அன்பினாற் பெரிய சோமாசிமாற ராகிய உண்மைப் பார்ப்பனர் உடனிருந்த சுந்தர மூர்த்தி நாயனாரால் அறிவு தெளிந்து அங்கு எழுந்தருளின நம்பெருமானுக்கு அவிசைத்தந்து பெரும்பேறு பெற்றனர். இன்னுந், திருஞானசம்பந்தப் பெருமானாலும் திருநாவுக் கரசுநாயனா ராலும் தம்முடைய திருப்பதிகங்களிலே வியந்து பாராட்டப் பெற்றவரும் சமணர்கள் சொல்லிய பழித்துரை பொறாமல், அவர்கள் எல்லாரும் நாணமும் அச்சமும் எய்தத், திருவாரூர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/155&oldid=1591822" இலிருந்து மீள்விக்கப்பட்டது