பக்கம்:மறைமலையம் 29.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் லயம் - 29

வந்து, தமது கலத்தின் இழிபால் தாம் திருவரங்கப் பெருமாள் கோயிலின் உள்ளே புகக்கூடாததுபற்றிக், காவிரித் தென்னாற்றின் தென்கரையில் திருமுகத்துறையில் தொலைவில்

நின்றபடியே இறைவனைப் பாடிப்பாடி நெஞ்சம்

நெக்குருகுவார். இவர் இங்ஙனம் புறத்தே எட்டநின்று தொழுது உருகுதலைக்கண்டு மனம்பொறாத திருவரங்கப் பெருமாள், லோகசாரங்க முனிவர் என்னும் அந்தணர்க்குக் கனவிலேதோன்றி, "நம்பால் மெய்யன்பு பூண்டொழுகும் பாண்பெருமாளை நீர் நெகிழ நினைத்துப் போகவேண்டாம்; அவரை நுமது தோளில் ஏற்றிக்கொண்டு நம் பக்கலில் அழைத்துவரல் வேண்டும்” என்று கட்டளையிட்டு மறைத்தருளினார். லோகசாரங்கர் உடனே விழித்தெழுந்து இறைவனது பேரருளை நினைந்து வியந்து, விடியற்காலையில் திருமுகத்துறையிலே நீராடி, அங்குவந்து நின்று இறைவனைப் பாடாநின்ற திருப்பாணாழ்வார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப், பெருமாள் செய்த கட்டளையை அவர்க்குத் தெரிவித்து, அவரைத் தமது தோளின்மேல் ஏற்றிக்கொண்டு, திருக்கோயிலின் உள்ளே சென்று, அவரை அரங்கப்பெருமாள் எதிரிலேவிட்டார். என்னும் இவ்வரலாற்றினால், அன்பினால் மிக்கவர் பிறப்பினால் இழிந்தவராயினும், பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதப்படுவோரும் அவர்க்குத் தொண்டு செயற்பால ரென்பதே இறைவனது திருவுளக்குறிப்பாதல் பெறப்படுகின்றதன்றோ?

அவரை

வணங்கி

இன்னுந், திருமழிசையாழ்வார் தாம் தாயின் கருப்பை யினின்றும் வெளிப்பட்ட காலத்திலேயே தாய்தந்தையராற் காட்டிலே தனியே விடப்பட்டு, அக் காட்டிற் பிரம்பு அறுக்கச் சென்ற திருவாளன் என்பனாற் கண்டெடுக்கப்பட்டு, அவனாலும் அவன்றன் மனைவியாலும் வளர்க்கப்பட்டவர்; அவர் இன்ன குலத்தினரென்று பிறப்பு அறியப்படா மலிருந்தும், அவர் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பின் மிகுதியால் உயர்ந்தோராகப் பாராட்டப் படுகின்றன ரல்லரோ? இன்னும், வைணவசமயத்தவராற் பெரிது கொண்டாடப்படுந் ை திருமங்கையாழ்வார் மிலேச்ச குலத்திற் பிறந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் கல்வியிற்சிறந்த பாவாணராத லோடு, திருமால் திருவடிக்கட் பேரன்பு பூண்டொழுகினவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/157&oldid=1591824" இலிருந்து மீள்விக்கப்பட்டது