பக்கம்:மறைமலையம் 29.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

133

நாலாயிரப்பிரபந்தத்தில் இவர் பாடிய செந்தமிழ்ச்சுவைப் பாடல்களே மிகுந்துள்ளன. இவர் குலத்தினாற் றாழ்ந்தோரா யிருந்தும், தமது கல்விப் பெருக்கானும் பேரன்பானும் இவர் மிக உயர்த்துப் பாராட்டப்படுகின்றனரல்லரோ? இன்னும், முதலாழ்வார்களாகிய பொய்கை, பேய், பூதம் என்பவரின் குலங்கள் இன்னவை யென்பது புலப்படாதிருந்தும், அம்மூவரும் ஏனையெல்லாரினுஞ் சிறந்தோராக வழுத்தப்படுதலைக் காண்டுமல்லமோ? இன்னும், வைணவர்களால் நம்மாழ்வார் எனச் சிறந்தெடுத்துக் கொண்டாடப்படுஞ் சடகோபர் வேளாளகுலத்திற் பிறந்தவராயிருந்தும், அவர்தங் கல்விப் பருமையினையுந் தவவொழுக்கத்தினையும் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பினையும் நோக்கிப், பார்ப்பன குலத்திற் பிறந்தவராகிய மதுரகவி யாழ்வார் அவர்க்கு மாணாக்கராகி அவர்க்குத் தொண்டுசெய் தொழுகின ரல்லரோ? இன்னும் இங்ஙனமே பிறப்பிழிபு சிறிதுங் கருதாமல், அன்பின் மிகுதிபற்றி உயர்ந்தோராகப் பாராட்டி வணங்கப் பட்ட வைணவப் பெரியார்கள் பற்பலர் உளர். இங்ஙனம் அன்பராயினார் எவராயினும் அவரை மகிழ்ந்து ஏற்கும் தம் ஆண்டவன் திருவுளக்குறிப்பை இனிது உணர்ந்த அவன் து அடியார்கள் அவ் அன்பர்களின் பிறப்பை ஒரு சிறிதும் நோக்காது அவர்களின் அன்புக்கே மகிழ்ந்து அவர்களுடன் ஏதும் வேற்றுமையின்றி அளவளாவி இன்புற்றார்கள்.

இனிச், சிவவேடத்தைக் கண்டு பிறரை அடியார்கள் வணங்கினாலும் சிவவேடமுடையார் தாமேவந்து சொல்லு கிறபடி யெல்லாம் அடியார் நடவார் என்று போலிச்சைவர் சிலர் பொய்யுரை புகல்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் தம்முடைய பகைவன் சிவவேடந் தாங்கி வந்தவுடன் அவனை வணங்கியதும், அப்பகைவன் தம்மைக் கத்தியாற் குத்திய அரவங்கேட்டுத் தத்தன் என்னுங் காவலாளன் அவனைப் பிடித்துக்கொள்ள ஓடிவந்தபோது, “நிறைத்தசெங் குருதிசோர வீழ்கின்றார் நீண்ட கையால், தறைப்படுமளவில் தத்தா நமர் எனத் தடுத்து அவனைப் பிறர் அவனைப் பிறர் கொல்லாமற் கொண்டு போய்விடு என்று கூறியதும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! ஏனாதிநாத நாயனார் தம் பகைவனைப் போரிற் பலகால் தோல்விபெறச் செய்தமை யால், அவன் இவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/158&oldid=1591825" இலிருந்து மீள்விக்கப்பட்டது