பக்கம்:மறைமலையம் 29.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் -29

வேறுவகையால் வெல்லல் ஏலாதென்று வல்லல் ஏலாதென்று உணர்ந்து தன் நெற்றியில் திருநீறிட்டு அதனைத் தெரியாமல் மறைத்துவந்து இவரைப் போருக்கு அழைக்க, இவரும் அவனுடன் சென்று போர்புரிந்து அவனை வெட்டப் புகுந்த பொழுதில், அவன் தன் முகமறைப்பை விலக்கித் திருநீறிட்ட நெற்றியைக்காட்ட, உ டனே அவர் அவனைச் சிவனடி

யாராக நினைத்து

வெட்டாமல் விட்டுத் தம்மை அவன் வெட்டும்படி நின்றார் என்பதையும் இன்னும் வை போன்ற பலவற்றையும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! இவ் வுண்மைகளை இனிது விளக்கிய,

"மண்ணாளும் மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும் வைய கத்தார் பாராதே வணங்கிடுவ ரஞ்சி

எண்ணாளும் இறையமலன் திருவேடந் திருநீ

றிட்டார்கள் குணங்குணக்கே டெனுமிரண்டும் எண்ணார், விண்ணாளத் தீவினையை வீட்டியிட விழைந்தார் விரும்பிஅவர் அடிபணிவர் விமலனுரை விலங்கல்

ஒண்ணாதே யெனக்கருதி ஒருப்பட்டே அமலன் ஒப்பரிய புரிவாழ்வு மற்றையருக்குண்டோ”

எனவும்,

6

“தேடிய மாடுநீடு செல்வமுந் தில்லைமன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்என்று நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்"

எனவும்,

“வெண்ணீறும், வேடமும் பூசையும் மெய்யென்றான் பொய் யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே”

எனவும்,

“எவரேனுந் தாமாக இலாடத் திட்ட

திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/159&oldid=1591826" இலிருந்து மீள்விக்கப்பட்டது