பக்கம்:மறைமலையம் 29.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இயல் - 6

உலக வழக்கிலும் சாதி இல்லை

இவைதாம் போலிச்சைவர் தெரியப்பெறாரேனும் உலகவாழ்க்கையாவது தெரிந்து அவர் நலம் அடைய லாகாதா? அந்தோ! போலிச்சைவர் அறியாமை இருந்தவா றென்னை! போலிச்சைவர் ஒருவர் கரவும் பொறாமையும் மன அழுக்கும் உடை டையவராகிப் பொய்பேசியும் பிறரை இகழ்ந்து உரையாடியும் பிறர் பொருளைக் கவர்ந்தும் வர, அவரைக்கண்டு “ஏ! இழிகுலத்தாய் என் இங்ஙனமெல்லாம் தீது செய்கின்றாய்?” என்று வினவினால், அதற்கு அப் போலிச்சைவர் “நானா இழிகுலத்தேன்? நான் என் தகப்பனுக்கேயன்றோ பிறந்தேன். நான் தேவாரம் ஓதவில்லையா? நான் தகப்பன் பெயர் தெரியாதவர்களிற் சேர்ந்தவனா? நான் திருவாவடுதுறை தருமபுர ஆதீனங்களில் எல்லாரோடுமிருந்து வயிறு நிறைய நன்றாய்ச் சோறுதின்று கறுத்துத் தடித்துப் பருத்திருக்க வில்லையா? பாருங்கள்!” என்று தமதுடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்டினால் அவர் சொற்களை உலகத்தார் ஏற்றுக்கொள்வார்களோ? "அடே பேதாய்! இவற்றை யார் உன்னைக் கேட்டார்? நீ உன் தகப்பனுக்கே பிறந்தாய் என்பது உனக்கு எப்படித் தெரியும்? பெண்களுடைய திறமையும் சூழ்ச்சியும் உனக் கெங்ஙனந் தெரியும்? முற்றத்துறந்த பட்டினத்துப் பிள்ளையார்,

66

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன் கையையெடுத் தப்புறந் தன்னில் அசையாமல் முன்வைத் தயல்வளவில் ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி யேகம்பனே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/161&oldid=1591828" இலிருந்து மீள்விக்கப்பட்டது