பக்கம்:மறைமலையம் 29.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 29

விலகி நல்வழியில் நடவாவிட்டால் நீ இழிபிறப்பினன் ஆதல் திண்ணம்.” என்று உலகத்தார் கூறுவார்க ளன்றோ?

அதனைக்கேட்டும் அறிவு விளங்காமல், "வேளாளர், தொண்டை மண்டில முதலிமார், கார்காத்தார், சோழியார், ஓதுவார், குருக்கள் முதலாயினாரல்லரோ உயர்ந்தசாதியார்? அவர்கள் மட்டும் அன்றோ ஒன்று கூடியிருந்து சோறு திண்ணல் வேண்டும்? இழிந்த சாதியாரான இடையர், வடுகர், கள்வர், மறவர், அகம்படியர், கைக்கோளர், நாட்டுக் கோட்டைச் செட்டிமார் முதலாயினோர் வேளாளருடனிருந்து உண்ணுவது கூடாதன்றோ? இழிந்தசாதியார் மேற்கூறிய

உயர்ந்த சாதியாரோடு சேர்ந்து உண்ணாமையால்,

சைவகுலத்திற் பிறந்தவனாகிய நான் எவ்வளவு கெட்ட ஒழுக்கமுடையவனா யிருந்தாலும் நான் உயர்ந்தவனே.” என்று அப் போலிச்சைவர் கூறினால் அதனைக்கேட்ட உலகத்தார். வேளாளர்

.

“சோழியர், கார்காத்தார் முதலான உள்ளபடியே இரக்க நெஞ்சமும், கல்வியும், நல்லொழுக்கமும், சிவபிரான் மாட்டும் அடியார் மாட்டும் மெய்யன்பும் உடையவர்களாயிருந்தால் அவர்களை உயர்ந்தோர் என்று சொல்வதில் தடையில்லை; அத்தகைய உண்மை வேளாளர் மற்றைச் சாதியாரை இழிவாக நினையாமல் எல்லாரிடத்தும் இரக்கமும் அன்பும் உடையவர்களாகி, மற்றைச் சாதியாரில் உயிர்களைக் கொன்று அவற்றின் இறைச்சி உண்பவர்களைக் கண்டால் ‘நீங்கள் கொலையாலும் புலால் உண்ணுதலாலுமே இழிவடைந்தீர்கள். அவற்றை அறவே ஒழித்து எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பாராட்டுவீர்களானால் நீங்கள் சிவபெருமான் திருவருளைப் பெறுதல் திண்ணம். நீங்களும் நம்முடனே கலந்து உறவாடலாம்.' என்று பலகாலும் எடுத்துச்சொல்லி அவர்களைத் திருத்தி, அங்ஙனம் திருந்தினவர்களைத் தம்மோடு உ ன்வைத்து வத்து உண்டு அளவளாவி வாழ்வார்கள்; அருளொழுக்கத்தைப் பரவச்செய்து சிவபிரான் திருவடித் தொண்டை விளக்குங் கலைஞரையும் தவப்பெரியாரையுங் கண்டால் அவரிடத்து அன்பினால் அகங்குழையப் பெற்றவராகி அவர்க்க அடிமை பூண்டு ஒழுகுவர். இத்தகைய உண்மைச் சைவர்களாலே நாடெங்கும் அருள் ஒழுக்கமும் சிவத்தொண்டும மிகும்; உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/163&oldid=1591830" இலிருந்து மீள்விக்கப்பட்டது