பக்கம்:மறைமலையம் 29.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

139

வொழுக்கமுடைய உயர்ந்த சாதியாரோடு ஒன்றுசேர்ந்து அளவளாவலாம் என்ற எண்ணத்தால், கொலைத் தாழிலையும் புலாலுணவையும் பிறர் எல்லாரும் அறவே ஒழித்து மேம்படுவார்கள்.

66

இங்ஙனம் செய்வதைவிடுத்து ஏ பேதாய், ‘பிறர் எவ்வளவுதான் நல்லொழுக்க முள்ளவர்களாய்த் திருந்தினாலும், நான் எவ்வளவுதான் கெட்ட ஒழுக்க முள்ளவனானாலும், நான் சைவகுலத்திற் பிறந்தவனாகையால் அவர்களோடிருந்து சோறுண்ணமாட்டேன்.' என்கின்றாய். இழிந்த இயற்கை இழிந்த செய்கையால் இழிந்த பிறப்படைந்த உன்னுடனிருந்து சோறுண்டால் நல்லொழுக்கத்தில் திருந்திய அவர்களுக்கும் இழிவேயாகு மல்லது உயர்வு ஏது? ஆகையால், சோறா சோறென்று சோற்றையே கட்டிக்கொண்டு அழும் போலிச் சைவனான உன்னை, அருளொழுக்கத்திற் சிறந்த உண்மைச் சைவர்கள் தம்முடன் சேர்க்க கூசுவர் அல்லரோ? சில காலத்துள் அழிந்துபோவதாகிய உடம்பையும் அவ்வுடம்புக்கு இடும் சோற்றையுமே பெரியனவாக எண்ணி அறியாமை யால் மிகவும் இறுமாப்படைந்து பிதற்றும் நீயும் உன்னை யொத்த சிலருங் கூறும் பொருந்தாச் சொற்கள் நாம் சிறிதுங்

கருத்தில்வைக்கத் தக்கனவல்ல,' என்று சொல்லாமற்

போவார்களோ?

கு

இங்ஙனம் உலகத்தார் கூறும் உலகவாழ்க்கையும் போலிச் சைவர்கள் உணராமல் தம்மையுயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் சருக்குற்று உரைக்கின்றார்கள்! இவர் பிறப்பினாலேயே தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வாரானால், அவ்வாறு சொல்வதனால் இவருக்கு இழிவே உண் மல்லாமல் உயர்வுண்டாதற்குச் சிறிதும் இடம் இல்லை. ஏனென்றாற், பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத்தவிர மற்ற எல்லாரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றார்கள். ஊன் உண்பவரும் உண்ணாதவரும் ஆகிய எல்லாரையும் அவர்கள் ஒரேவகை யாகத்தான் நடத்துகின்றார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினனாய்ச் சென்றால் அவனுக்குப் பிராமணர் தாம் உண்டு

மிகுந்த எச்சிலையே புறத்தேவைத்து உண்ணாதவன் போனாலும்

இடுகின்றார்கள்; ஊண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/164&oldid=1591831" இலிருந்து மீள்விக்கப்பட்டது