பக்கம்:மறைமலையம் 29.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 29

“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க்கே காந்த ரல்லராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்

அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே.”

என்று அருளிச்செய்தனர். இங்ஙனமே, “யச்சண்டாளசிவ இதிவாசம்” என்னும் முண்ட கோபநிடத உரையானது எவன் ஒருவன் சிவ என்னும் மொழியைச் சொல்லுகின்றானோ அவன் சண்டாள குடும்பத்திற் பிறந்தவனாயிருந்தாலும் அவனோடு பேசுக, அவனோடு இருக்க, அவனோடு அருகிருந்து உண்ணுக என்று கூறுகின்றது. இங்ஙனமே,

“புலையரே யெனினும் ஈசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றுந் தலையரே யெனினும்ஈசன் றாமரைத்தாளின் நேசம் இலரெனில் இயற்றும்பூசைப் பலந்தருவாரே யாரோ?”

என்று சிவதருமோத்தரமும்,

“எள்ளற் படுகீழ் மக்களெனும் இழிந்தகுலத்தோ ரானாலும வள்ளற் பரமன் றிருநீறு மணியுமணிந்த மாண்பினரை

யுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே கொள்ளத்தகைய அறிவினரே பிறவிக்கடலிற் குளியாதார்."

என்று பிரமோத்தர காண்டத்தும் சொல்லப்பட்டிருத்தல் காண்க.

இவைபோலுந் திருவுரைகளுக் கெல்லாம் வழிசெல்லத் தெரியாத போலிச்சைவர் அன்பினாற் செய்வனவற்றிற்கு முறையும் விலக்கும் இல்லை; மற்றை உலகவழக்கத்திற்கோ சாதிவேற்றுமை பாராட்டியே வரல்வேண்டும் என்கின்றார். உலகவழக்கிலும் ஒருவனை அவன் பிறப்பு நோக்காது அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/169&oldid=1591836" இலிருந்து மீள்விக்கப்பட்டது