பக்கம்:மறைமலையம் 29.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

கல்வியறிவினையும்

145

நல்லியல்பு நற்செய்கைகளையுமே பாராட்டி அவனைப் பலவகையாலும் பெருமைப்படுத்தி உயர்ந்த நிலைகளையும் வரிசைகளையும் அளிக்கின்றார்கள் என்பதனை மேலே விளக்கிக்காட்டினாம். ஆதலால், அன்பு நெறிக்குத்தான் சாதி வேற்றுமை இல்லை, உலகநெறிக்குச் சாதிவேற்றுமை உண்டு என்னும் போலிச்சைவர் கூற்றுப் பொய்க்கூற்றேயாம் என்க. அங்ஙனமன்று பிறப்பினாற் றாழ்ந்தவனுக்குக் கல்வியும் நல்லியல்பு நற்செய்கைகளும் பற்றி உயர்ந்த நிலைகளும் வரிசைகளும் அளித்தும் அறிவுடையோர் கூடிய அவைகளில் முன் அமரச்செய்தும் அவனைப் பெரிது பாராட்டினாலும், உயர்ந்த சாதியார் அவனோடு அருகிருந்து உண்பதில்லையேயெனின்; போலிச் சைவர் தாம் அப்

பெரியவனோடு அருகிருந்து உண்ணோம் என்று தமது அறியாமையாற் செருக்குற்றுப் பேசுவார்களே யல்லாமல், உண்மைச் சைவர் அப்பெரியானோடு அளவளாவி யிருந்துகண்டு நல்வினையும் மகிழ்ச்சியும் எய்துவர்; அறிவுவடிவாய் விளங்குங் கற்றோர் கழகங்களில் தலைமையோ டிருந்து அறிவுரை நிகழ்த்துங்கால் அப்பெரியோன் காற்கீழிருந்து அதனைக் கேட்டும், அவன் உயர்ந்த நிலையில் அமர்ந்திருக்குங்கால் அவனெதிரே கைகட்டி வாய்புதைத்து நின்று அவன் ஏவிய பணிசெய்தும், தமது தாழ்மைக்காட்டி வந்த போலிச்சைவர் சிலர் சோறு தின்னும்போது மட்டும் தாம் அவனோடிருந்து உண்பதில்லை என வெறுஞ்சோற்றுப் பேச்சைப்பேசித் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ளும் பதரானபேதைமைச் செய்கையைக்கண்டு அறிவுடையோர் நகையாடாமல் இரார். சாப்பாட்டு ராமசாமிகளான போலிச்சைவருக்குச் சோற்றைத் தவிர வேறுயாது தெரியப் போகின்றது! ஒருவரிடத்துள்ள அறிவின் அருமையும் நல்லியல்பு நல்லொழுக்கங்களின் பெருமையுஞ் சோற்றாட் களுக்கு எங்ஙனந் தெரியும்? அவர்களுக்குச் சோறுதான் தெய்வம்; ஊனுங் குருதியும் சீழுஞ் சளியும் நீரும் மலமும் வழியும் புழுப்பாண்டமான தமதுஉடம்பின் பிறப்புத்தான் அவர்களுக்குத் தேவப்பிறப்பு!

கடவுள் அன்பிற் சிறந்தவர்களுக்கும் அறிவுமிக்க துறவிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை

ல்லையென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/170&oldid=1591838" இலிருந்து மீள்விக்கப்பட்டது