பக்கம்:மறைமலையம் 29.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 29

சாதி

போலிச்சைவர் மொழிந்தால், தெய்வமில்லை யென்னும் நாத்திகர்களுக்கும் அறிவிலிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை வேண்டுமென்பது பெறப்படும். போலிச் சைவர் வேற்றுமையைப் பாராட்டிக்கொண்டு அறியாமைச் சேற்றிலும் நாத்திகப் படுகுழியிலுமே கிடக்கவேண்டு மென்று விரும் பினாரானால், அவர் அப்படியே கிடக்கட்டும். தமது புல்லறிவை உண்மைச் சைவர்களிடங் காட்டி அவர்களையுந் தாங்கிடக்கும் படுகுழியில் வீழ்த்த முயல் வராயின், அவரது புல்லிய செய்கையைக்கண்டு அறிவுடையார் வருந்தா திருப்பரோ? எமக்கு அன்பும் வேண்டாம் அறிவும்வேண்டாம் நல்லியல்பு நற் செய்கைகளும் வேண்டாம், அவற்றிற் சிறந்த நல்லோரிணக்கமும் வேண்டாம், எமக்குச் சோறு ஒன்றுதான் முதன்மையானது, அதுமட்டுந்தான் எமக்குவேண்டியது என்று போலிச்சைவர் சொல்வரானால், அவ்வளவு அறியாமையிலும் ஆணவத்திலும் அமிழ்ந்திக் கிடக்கும் அவர் இன்னும் பலகோடி பிறவிகள் எடுத்தா லன்றித் திருந்தமாட்டார்; ஆகையால், அத்தன்மை யோரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதல் உண்மைச் சைவர்க்குப் பெருந்தீவினையாய் முடியுமாதலால் அவர்களை இவர்கள் சேராமல் ஒழுகுதலே செயற்பாவர்.

ன்னும், பிறப்பினாலேதான் சாதியுயர்வு பெறப்படு மென்று போலிச்சைவர் கூறுவரானால், சைவவேளாளர் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோர் என்று கூறிக்கொள்வது போலவே, மற்றைச் சாதியாரும் தம்மைத் தாம் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்கின்றார்கள். ராஜபுத்திரர் என்னுஞ் சாதியார் தாம் ஊன் உண்பவராயிருந்தாலும் பார்ப்பனர் முதலான எந்தச்சாதியார் வீட்டிலும் தாம் சாப்பிடு வதில்லாமையால் தாமே எல்லாச் சாதியாரினும் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்கின்றார். கம்மாளர் தாமே பார்ப்பனர் என்று று மேற்கோள்கள் பல காட்டித் தம்மை உயர்த்திக் கொள்கின்றார். வன்னியர் தாமே 'க்ஷத்திரியர்' என்று மேற்கோள்களோடு நூல்கள் எழுதித் தம்மை உயர்த்திக் கொள்வதோடு, வேளாளர் முதலான மற்றவரை எல்லாம் தாழ்ந்த சூத்திரவகுப்பினர் எனவுஞ் சொல்லி வருகின்றார். சான்றார் தாமே ‘க்ஷத்திரியர்’ என்று இதழ்களினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/171&oldid=1591839" இலிருந்து மீள்விக்கப்பட்டது