பக்கம்:மறைமலையம் 29.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

66

149

சாதிமக்கள் மற்றொரு சாதி மக்களொடு கலப்புற்று நின்றமை தெற்றென அறியப்படுதலால், அவர் வழியில் வந்தோரான நம்மனோருள் எவரையுங் கலப்பில்லாத் தனி இனத்தவரெனக் கூறுதல் தினைத்தனையும் ஆகாமை காண்க. இவ்வாறே, சாதிக் கலப்பால் வெளிப்படையாக உண்டான பல்வேறு சாதிகளை மனு முதலியோரும் வகுத்துரைக்கின்றனர். “ஒரு பார்ப்பனனக்கு ஒருவைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘அம்பட்டன்' எனப்படுவான்; ஒரு சூத்திரப்பெண்ணி னிடத்தே பிறந்தவன் ‘நிஷாதன்' அல்லது ‘பாரசவன்' எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு சூத்திரப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘உக்ரன்' எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணிடத்தே பிறந்தவன் ‘சூதன்' எனப்படுவான். ஒரு வைசியனுக்கு ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘மாகதன்’ எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘வைதேகன்' எனவும் பெயர்பெறுவான். ஒரு சூத்திரனுக்கு ஒரு வைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘ஆயோகவன்' எனவும், ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘க்ஷத்திரி' எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் ‘சண்டாளன்' எனவும் பெயர்பெறுவான்.' என்றற் றொடாக்கத் தனவாக இன்னும் பற்பல கலப்புச் சாதியார் களையும் மனுமிருதி பத்தாம் இயலில் ஆறாஞ் செய்யுளிலிருந்து முப்பத்தொன்பதாஞ் செய்யுள்காறும் விரித்துரைத்தல் காண்க. இங்ஙனமே கௌதமர், வசிட்டர், போதாயனர் இயற்றிய தருமநூல்களுங் கலப்புச் சாதிகளை விரிவா யெடுத்துக் கூறுதல் கண்டுகொள்க. வ்வாறு

பண்டைக் காலந்தொட்டே மக்கள் ஒருவரோடு ஒருவர் பலவாறு கலந்து வருதலால், அம்முன்னோர் கால்வழியில் வந்தோரான நம்மனோரில் எவருந் தம்மைக் கலப்பில்லாத் தனிப்பிறவி யாகச் சொல்லிக்கொள்ளுதலினும் பெரும் பேதைமை பிறிதில்லை. காமமுங், காதலும், பசியும், பொருண்மேல் அவாவும் உள்ளவரையில் மக்களுள் எவருங் கலப்பில்லாத் தனியராய் இருந்து உயிர்வாழ்தல் இயலாது. க்காமம் முதலியவற்றின் கொந்தளிப்புகளைத் தணிக்கும் பொருட்டு அறிவுடையோர் எத்தனையோ நூல்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/174&oldid=1591842" இலிருந்து மீள்விக்கப்பட்டது