பக்கம்:மறைமலையம் 29.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 29

எழுதிவைத்தும், எத்தனையோ சாதிக் கட்டுப்பாடுகளைச் செய்துவைத்தும், அவையெல்லாம் அவற்றின் எழுச்சிக்குமுன் பஞ்சாய்ப் பறந்துபோகின்றன. ஆகவே, மக்கட்பிறவி யென்கின்ற பேராற்றிலே இயல்பாக அமைந்த பெருஞ் சுழல்களாகிய காமங் காதல் பசி பொருட்பற்று என்னும்

வகளைச்

சாதிக்கட்டுப்பாடு என்னும் வைக்கோற் றிரணைகொண்டு தடுத்தல் சிறிதும் இயலாதாகையாற், சொல்லளவாயுள்ள அச் சாதிக்கட்டுப்பாடுகளைத் தொலைத்து, அறிவுமிக்க உயர்ந்த முறைகளால் அவற்றின் மும்முரத்தைத் தணித்தலே விரைவிற் செயற்பாலதாகும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/175&oldid=1591843" இலிருந்து மீள்விக்கப்பட்டது